என் கணவனோ...காதலனோ..
என்னுடன்
இருக்கும்வரை...
தடம்புரளவும் ..
குடைசாயவும் சந்தர்ப்பம் இல்லை
என்னைவிட்டு...
படியிறக்கிப் போகும் போது...
சறுக்க சற்று வாய்புண்டு அன்பு !
என்னிடம் உறவு,உணர்வு,உடல
்,உள்ளமென...
வைக்கலாம்...
வெளியில் உள்ளத்தால்
மட்டுமே..
எனக்கும் வெளிக்கும்
வேறுபாடல்லவா..
அவன் வந்துசேரவேண்டும்
களங்கமின்றி கண்படாமல்..
அன்புக்கும் கற்புண்டல்லவா..
களவுகொடுக்காதே!
களவெடுக்காதே!
கற்பழிக்காதே!
எனச் சொல்லமுடியாத
பாக்கியவாக்கியமிது
திரும்பி அவன் வரும்வரை...
கடவுளே......!
கறைபடிய
என்கண்ணை உறுத்தவைக்காதே
பிரண்டு கொள்ளவிடாதே...
மிரண்டுபோகவைக்காதே...
முரண்டும்பிடிக்கச்
செய்யாதே என...
என்னால் பிராத்திக்கமட்ட
ுமே முடியும்
அன்பே ! என் அன்பே!! என்னன்பே!!!
நம் தனிப்பட்ட
அன்பு எனக்குமட்டுமென
இறைவனிடம்.
Friday, 5 December 2014
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment