Friday 12 December 2014

காளையின் வீரத்துக்காக கட்டிய
கவிமாலை...
==============================
============
வாழ்த்த வயதில்லையென
நழுவிப் போகமாட்டேன்
வயசுக்கு வந்தவதான்!
பூ பூ நீராட்டி அந்த புண்ணிய
காலணை தொட்டு
நாங்கள் கணையாழியிட...
காளையென களம் வந்தார்
கண்களுக்கு தெரிய..
மலர் இருப்பது வேரால்தானே!
தமிழ்மணம்
இருப்பது இன்ஊரில்தானே!
தந்தை நம்தாயை மதிப்பதால்
தம்பிரானல்லவா!
மொழிக்கும் குயிலல்லவா,வலிக
்கும் துடுப்பும் நீயல்லவா
விழிக்கும்
எமக்கு புலரும்பொழுது நீயல்லவா
களிக்குது உன் கல்கண்டு , சிங்காரச்
சிங்கையென்று
“மலை”
தமிழிலிருந்து பிளந்துகட்டி
மாலை மாலையன விழும் ஊற்றை
மரணமில்லையென குதித்துக்
குறிசொல்லும்
குறிஞ்சிக் குமரனிவர்
தமிழ்கட்டுண்டு அதன்பால் சுரக்கும்
கோமகன் எங்கள் குலமகன்
கட்டிடக் கலைஞன் இவர்
எம்வீட்டில் குடியிருக்கும்
கலைவாணரும் இவர்
செம்மொழியை கட்டியகம் வைத்து
களித்தாடும் தில்லைக் கூத்தரும்
இவர்
தந்தைக்கு உபதேசம் செய்த
சுவாமிநாதனல்ல நான்
இந்த பாரிக்குமேல் படரும் தமிழ்
முல்லைநான்
நானும் ஒரு ஏ
பி தான் ,ஏகாம்பரத்தின்
பிள்ளையானால்...

No comments:

Post a Comment