Friday 12 December 2014


துடிக்கும் கரங்கள்
துள்ளும் இதயம்
துருபிடிக்கா அன்பு
துலக்கமுடன் பார்வை
துணிகரமான நெஞ்சம்
துடுப்புப் போல் நட்பு
துகிலுரியா பார்வை
துடிதுடிப்பான சிந்தனை
துதிக்கும் வழிபாடு
துர்நாற்றமில்லா உறவு
துர்மரணமில்லா வாழ்வு
துரிதச் செயல்பாடு
துவேஷம் தூக்காத ஒற்றுமை
துரத்தாத காதல்
துளசிபோல் வாழல்
துவக்க நாளில்...
துவங்குவோம் இத்துடன்.

No comments:

Post a Comment