Saturday, 6 December 2014

அந்த புகைப்படத்தை ..
அனுப்பிருந்தேன் கைதேர்ந்த கலைஞனிடம்
வரைந்தனுப்பென...
வண்ணத்துக்குள்ளும்..
தூரிகைக்குள்ளும்..
அடங்க மறுத்துவிட்டதுபோலும்..
இல்லை....
கெண்டையாய்.. கண்ணும்..
கெழுத்தியாய் ..முள்ளும்...
கொண்டையாய்..கோழியும்
கெக்கலிக்கும் ..நண்டும்..
கெச்சை நடை துள்ளி இறாலுமென...
கெட்டியாய் துலக்கம்
காட்ட..
கட்டி பத்தியமாய் இருந்தவன்
பயந்தானோ..?!
கலிகூட்டி..
சிரிப்பொன்றை
கட்டுப்பெட்டிக்குள் வைத்து
கட்டிச்சீல்
வைத்து அனுப்பிருந்தான்
அந்த கட்டுப்பாட்டுச் சித்தன

No comments:

Post a Comment