Saturday, 6 December 2014


சனிக்கிழமை {ava}ஏவாகுட்டி எங்க
வீட்டுக்கு வந்தா
மத்தியானம் 12.30
செல்லத்தை {playground}
க்கு எடுத்துப் போனேன்..போகும்ப
ோதே தூரத்தில் ஏதோ..அசவதுபோல்
தெரிந்தது
கிட்டப்போய் பார்த்தோம்
ஒரு புறா பறக்கமுடியாமல்
கொளுத்தும் வெயிலில்
கிடந்து கஷ்ரப்பட்டுக்
கொண்டிருந்தது.
இதுவரையில் நான் எந்த
பிராணியையோ,பறவை
களையோ..தொட்டதில்லை. ஆனால்
ரசிப்பதுண்டு தொடாமலேயே..என்ன
செய்யலாம் என யோசிக்கும்போது.
.என்பாட்டி அதுதான் என்
செல்லகுட்டி சொன்னாக..டெக்ஹோம்
அன்ரிகலாமா என்றாளே பாக்கலாமே..
இந்த சின்ன வயதிலேயே..கருணை
பிஞ்சு மனதில்...
கையால் தூக்க பயமும்...பழக்கம
ுமில்ல..பக்கத்தில் கிடந்த
ஒரு காகிதத்தை எடுத்து ஓரு கையில்
புறாவும்,மறுகையில் ஏவாவுமாக
வீட்டுக்கு விரைந்து வந்தேன்.
வாசல்படியோரம் வைத்து என்ன
நடந்திருக்குமென நானூம் ஏவாவும்
ஆராட்சி நடத்தும்போது..ஏவாவின்
பாட்டி வந்தாக..கேட்டாக நானும்
நடந்ததை சொன்னேன்..
என்ன நடந்ததென
யூகிக்கவே முடியவில்லை வால்
பகுதியை மட்டுமே ஆட்டிக்கொண்டிரு
ந்தது .தண்ணீர் தெளித்தேன்,அரிச
ி போட்டேன் ம்ம்ம்கும்
அதனால் தலையைக்கூட
நிமிர்த்தமுடியவில்லை..ஆனால்
ஒன்று அடிக்கடி தலையை நிமிர்த்தி என்னைப்
பார்த்து கண்ணை உருட்டும்.. அதில்
தெரிந்த கருணை,அன்பு,பாச
ம் ..அப்பப்பா..இன்னும் என்னால்
ஜீரணிக்க முடியவில்லை..
பின் ஒரு பெட்டிக்குள்
வைத்து வீட்டுக்குள் வைத்தேன்.
பாவமாக இருந்தது,தடவிக்
கொடுத்துக்
கொண்டே இருந்தேன்.அதன்
பார்வை நன்றி சொல்வதாகவே எனக்குப்
பட்டது அத்தனை தெடுகை என்
மனதை அந்த பார்வை!
அன்று எனக்கு சாப்பிடக்கூட
மனசில்ல..ஏவாவின் பாட்டியின்
அன்புக்காக..கடமைக்கு உண்டேன்.
மீண்டும் பக்கத்தில்போய்..மனதில்
என்
காளியம்மாவை நினைத்து உயிரை காப்பாற்றிவிடு என..வேண்டிக்கொண
்டிருக்கும்போது...மனதில்
அது உதித்தது...ஹோலில் இருக்கும்
மாதா மேரியின் பக்கத்தில்
இருக்கும் {holy water}
கண்ணில்பட..போய்
அதை எடுத்து வந்து கையில்
கொஞ்சம்
ஊற்றி மனதில் ..உயிரைகாப்பாற்
றம்மா என..வேண்டி தெளித்தேன்..
என்னை நிமிரமுடியாத
நேரத்திலும்..நி
மிர்ந்து பார்த்தது..அப்ப
ப்பா.....அந்தபார்வை இன்னும் என்
கண்ணுக்குள்ளே..
தடவிக்
கொடுத்துவிட்டு வந்துவிட்டேன்..
.ஒரு 10நிமிடமும்
ஆகவில்லை அதன் உயிர்
பிரிந்துவிட்டது.
என்னால் அதிசயிப்பதா...அ
ழுவதா...என்னசெய்வதெனத்
தெரியாமல் மனது நொந்தேபோனது..
என்னது தொட்டகுறை,விட்ட
குறையா..ஏன் நான் அந்தநேரம்
அங்கு போகனும்..ஏன்
அது என்கண்ணில்படனும
்..இப்படிப் பலகுழப்பமாகவே..
இருக்கிறேன்..இந்த
நான்கைந்து நாட்களாக....
துணிவு,தன்னப்பிக்கை,எதிர்த்துப
்போராடும் திறன், எதையும்தாங்கும்
மனது இப்படிப்
பல...இருந்தும் ..அந்த
உயிருக்காக..என்மனம்
அனைத்தையும்
இழந்து என்னமோ...செய்கிறது அந்த
கொஞ்சநேர பாசத்துக்காக..
எந்த உயிர்மேலும்..அன்பு,பாசம்
வைக்ககூடாது என
இப்போது நினைக்க தோணுகிறது..
அதுவாக வந்து...நெஞ்சைத
ொட்டு .செத்து மடிந்ததே...
மடித்து வைக்க முடியாமல் செத்துக்
கொண்டிருக்கிறேன் நான்!!
இனிமேல் பாதையைப் பார்க்காமல்
நடந்துகிட்டே இருக்கனும்
என்னமோ..நடக்கட்டும்...நமக்கென்ன
என்று!
இருக்குமா..?மனது..?! மனந்தான்
வருமா..?!

No comments:

Post a Comment