Friday 26 December 2014


உதறிவிட்டேன்
என் இதயத்தை
சிதறி வந்தது
உன்னிடம்
கதறவிடாதே..
காத்துக்கொள்ளும்
பதறியும் தேடேன்..
நீ..
பாதுகாப்பான
பவளப்பாறையாச்சே..


வாய்ப்பாட்டைக் காட்டி
நீதானே
தினமும்...
மனனம் செய் என்றாய்

பாடம் செய்தது
பாட்டை வாய்

வாய்பாடும் நானும்..
தனிப்பாட்டிலே...

என் வாய்பாட்டை
ஒப்புவிக்க..
நீதான்..
பக்கமில்லையே...


துடித்துத் துடித்து
துடிப்படங்கப் போகிறது...
நீ என்ன..
கொம்பேறிமூக்கனா..

முளையிலே வீரம்
பாறையை
பாகாக நினைத்து
பதம்பார்க்கும் பருவமே..!

பாறையும்..
இதயத் தால் வெறும் உப்பே..!
கரைத்து தள்ளிவிடு
உன்
கரையாத தன்நம்பிக்கையால்.

சில பெண்களிடம்
அழகின் இரகசியம்
என்ன
எனக் கேள்வி எழுப்பப்பட்டது

பயிற்சி,
தியானம்,
கட்டுப்பாடு,
சாப்பாடு,
தூக்கம்,
பாவனை,
அழகுசாதனம்
என...
அடுக்கிக்கோண்டே...

இதயத்தை மறந்து..

“அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” என.
செலவின்றி சுலபமான வாசகத்தை
தெள்ளத் தெளிவாய் அள்ளி உரைக்க மறந்தவர்களாக...

Wednesday 24 December 2014


ஊண் உண்ணும் சாதியல்ல என ஊன்றி
ஊறிவிட்டாய் வண்ணத்தின்மேல்
உள்ளம் உண்டு உயர்சாதியாய்..
கொள்கிறாயா.. பெண்சாதியாய்..

இந்தகிளி கோலமிட..
கொஞ்சம் தூரத்தை தள்ளிவைத்து
கிள்ளி வையேன் செந்தூரத்தை.

ஒன்றிவிட்டேன்
நீ
மிருகம் அல்ல எனத் தெரிந்தபின்...

வேளையில்..
அந்த மின்வெட்டு
பெண்பட்டு போனது..
வெண்பட்டுத் துணிபோல...

கண்பட்டு மாறுமா...
கறுப்பும் வெள்ளையும்..

உறுத்தும் புண்ணை!
அறுத்த மீனை!
கறுத்த ரத்தத்தை!
சிறுத்த மனதை!
திருத்த இடமுண்டா...
சீர்திருத்தும் இதயங்களில்...

இந்த பொன்னூஞ்சலின்
வனப்பின் ரகசியம்
இந்த போர்வைதான்..
நீங்களும்
கண்டு..
வாங்கி..
கொண்டு...
ஆக்கி..
பயன்பெற்றுப் பாருங்களேன்.
உங்களின்
இளமையும் துள்ளும்

கொட்டும் மழையிலே...
குளிரும் சிட்டுக்கு
துணி...
கொடுக்கத் துணி
காக்கும் கரங்களால்
கட்டிக்காதலுடன்...
கெட்டிப்போர்வையொன்றை

Monday 22 December 2014


எத்திரை போட்டாலும்
நித்திரை இல்லையடி..

அந்த முத்திரை அன்பாலே
மாத்திரை கொடுக்கிறாய்

சுற்றி வரைகிறாயடி
சுவரெல்லாம் சித்திரமாய்..
என் மா திரையிலே..

தோத்திரம் பாடினாலும்
தோற்றுவது உன் எழில்

ஆத்திரம் வரவில்லை
அம்பிகையே..நீஎனக்கு.

முறைக்காத முள்ளடிநீ

மயக்காத கள்ளடிநீ

மறைகாத திரையடிநீ

வெற்று இலைக்கு பாக்கடிநீ

வெறுகாத இதயமடிநீ

இந்த பாறாங்கல் பாறைக்குள்
இத்தனையும் ஊறத்தான்
அத்தைமகனாய் மாறுகிறேன்..
சொத்தையெனத் தள்ளாதே..
சொத்தென ஏற்றுக்கொள்ளேன்
பத்தரைமாற்றுத் தங்கமே!
என் அழகோவியமே..!!!

நான் செண்டுதானே...
ஏன்..மணக்கவில்லையா...

பின் ஏன் சென்று
வாங்கி,
வந்து,
எனக்களித்தாய்...

எனக்கு வாங்கத் தெரியவில்லையென்றா..
இல்லை..
வாய்பேசத் தெரியவில்லையென்றா..

மனம்,
மானம்
மதிப்பு
மரியாதை
மகள்
நான்
உயிரென...
உன்னை நம்பி வந்ததற்காகவா...

வேறுறவாடி...
நீ
வேண்டி வந்த உன் பரிசால்..
எங்களுக்கழிவென்று
சொல்லிச் சிரிக்கிறதே
அந்த உயிர்கொல்லி நோய்

ஊமை உன் நிழலில் வாழ்ந்ததற்காகவா
நீ கொடுத்தாய் இந்த துரோகத்தை!!!


தழுவுகிறேன்
தாலாட்டுகிறேன்
சத்தத்தை வாங்குகிறது
சலசலக்கிறது
சங்கீத வித்தகனாய்கூட மாறுகிறது
வேர்மட்டும் ஊன்றியபடியே..
அந்த மண்ணைவிட்டு வெளிவரமுடியாமல்..

சுட்டுக் கொண்டேதான் இருந்தது
கண்
யாரையும் நெருங்கவிடாமல்...
இடுக்கி கண்கொண்டு
ஏந்தி,
எடுத்துச் செல்கிறான்...
எந்த நாட்டு வீரன்...!
குண்டு இதயம் பாய்ந்து செல்கிறதே..
அவன் பின்னால்....
காத்திருந்ததுபோல்....


ஓர் அறிவிலிருந்து,,ஆறறிவுவரை
அனைத்து அன்புகளுக்கும்
அருள் கிடைக்க
அந்த ஆரோக்கியமாதாவை,அன்னைவேளாங்கன்னியை,தேவமாதாவை,யேசுபிரானை வேண்டுகிறேன்,வேண்டுவோம். நத்தார் வாழ்த்துகள் அனைவருக்கும் .என் காலைவணக்கத்துடன்... {எங்களின் நத்தார் மரம் நீங்களும் பாருங்களேன்...

ருவாக
தமிழ் பொண்ணுபாக்க வருவாக

பாத்திகிட்டு போவாக
பாக்காமலும் போவாக
தொட்டுகிட்டும்போவாக
தொடாமலும் போவாக
எடுத்து சொல்லிப் போவாக
எடுத்துகிட்டும் போவாக
கண்ணடிச்சு போவாக
கை கொடுத்தும் போவாக
இதயம் தொட்டும் போவாக
இமயம் என்று சொல்வாக
காதலையும் கொடுக்காக
காதலாயும் இருக்காக..

உள்ளால வருவாக உவகையும் கொடுப்பாக
உத்தரவின்றி வருவாக உபத்திரமா இருப்பாக
எம்புட்டு முகங்களென்னு கணக்கு பாக்க தெரியாது
ஒன்னு பத்து முகமென்னா தனியாக கொடுத்திருப்பேன்
ஆறுபத்து முகங்களயும் எப்படியப்பு சொல்லுறது
மறந்து விட்டுபோனா உங்களுக்கு நோவு
தெரியாம விடுபட்டுப்போனா எனக்கு நோவு
இம்புட்டு உள்ளங்களின் ஓட்டுமொத்த முகங்களுக்கு
பம்புசெட்டு கட்டிகிட்டு பீச்சுகிறேன் நன்றிய...
இட்டுத் தாங்கோ அன்பையும்
எடுத்துகிறேன் பண்புடனே...
விட்டுப் போகா பாசமுடன்
கட்டுக் கரும்பாய் இருப்போமே.

பொண்ணு பாக்க வாருங்களேன்..
தமிழை
பொண்ணுபாத்து வாரு ங்களேன்...


என்னைப் படைத்து
உன்னை கடைதிருக்கிறான்
ஏன்...
ஒன்றாய் இணைக்கவில்லை
சாமி...
சாமி...
கூடையில் கொத்துப்பூவும்..
வாழையில் பொங்கலும்..
பலாவின் சுளையுமாய்..
மாம்பழமும்...
வதை பிழிந்த மதுரத்தின்
நெய்மணக்கும் படையலை பார்த்து
வாய் ஊறி வழிந்த வண்ணமே...
தப்பு.....தப்பு....
சிலைக்கு சொந்தம்
கையை வைக்கலாமா...
கன்னத்தில்தான் எத்தனை வகை...
காலத்தை தாண்டவேண்டுமே...
கலைக்கோயில் பொக்கிஷம் ஒன்று
என்னைக் கடந்து போய்க்கொண்டிருக்கிறதே....


காற்று வளம் பார்த்து
அவ்வப்போது
வந்து அமர்வதும்..
கொத்தி உண்பதும்..
பின்
பறப்பதுமாய்...

அடி
ஆணியுடன்...
அகலமுடியாமல்...

பறவைக்கு சிறகையும்
குணவதிக்கு வேரையும்
ஏன் படைத்தாய் குணசீலா....


வருடப்பிறப்பே..எம் கலைவாணிகே முதல் அர்பணம்.
=============================================

கல்வி,செல்வம்,வீரம்
வரம்!
வேண்டியதை எடுத்துக் கொள்ளென்றால்...
கசடற சொல்வேன் கல்வியென
செல்வம் என் நா
வீரம் என் சிந்தை
இவை இரண்டையும் வைத்தே...
சம்பாதித்துவிடுவேன்
இதற்கு
கல்வியறிவுதானே தேவை
கலைமகளே..! கட்டிப் பிடியேன் ..
இன்னும் கொட்டிக் கொடேன எமக்காக..

வாடி விழுந்தபோதெல்லாம்...
கொஞ்சம் வசமிழந்துதான் போகிறேன்
அன்பு
கூடிப் போனதால்தான் இது குடிகொண்டதோ...

தாடியை முன்வைத்தவனே..!
இதற்கு நான் தவிடாகிப் போகிறேன்

மலடி இவ என மலைத்து நிக்காதே
நாலடி எட்டுவைத்து நகர்ந்துதான் வாயேன்

பேயடிப் புளியல்ல..
பேந்தப்பேந்த முழிக்காதே..
வாய்காலடி நீயென...
கால்பதித்து கைநனைத்து வாயலம்ப வாயேன்டா

வேய்யடா ஓலையை மோட்டுவளை நோக்கி..
பாயடா பார்த்து தர்பைக்கு நோகாமல்..
தாயடிகொடுத்த சீதனம்தான் வாயாடி
நீயாடிப் போகாதே...
கொடிக்கேத்த செடிதான்
கூடிக் காய்ப்போமா...


குரல்வளமும் தெரியும்..
பேச்சுமொழியும் அறிவாய்
பின் ஏன்...
அடைத்துவைத்திருக்கிறாய்..


பருத்திக்குள் வா என்றேன்
நெய்துவிடுவாய் என்றான்

பட்டுக்குள் வா என்றேன்
கொன்றுவிடுவாய் என்றான்

வளைக்குள் வா என்றேன்
மூடிவிடுவாய் என்றான்

வண்ணத்துக்குள் வா என்றேன்...
சொல்லி..
வாய் மூடும் முன் வந்துவிட்டான்
முற்றுப் புள்ளியை விரும்பாத..
தொடர்கதையை விரும்பிப் படிக்கும் வாசகன்.

பொதுப்படையில்தான் திட்டி எழுதினேன்
ஒரு உள்படை வெந்த உயிர்
கெந்திக் கெந்தி...
பெரும்படையெடுத்து...
“பாவம்”!! என.. ஆயுதமேந்தி..
எதிர்படையுடன் வந்தது.
கறுப்படையச் செய்தும்
கவலைப்படாமல்...

எரிபடை விழுந்தாலும் ..
ஏந்திக் கொள்ளும் ஜான்சிராணிகள் நாங்கள்
உங்களிடம் இருக்க வேண்டியது
ஏன் கை நழுவிப்போனது வீரர்களே...???

இராமனா..இராவணனா..
துஷ்சந்தனா....
நளனா...
பாரியா...
சிவியா..
சீதையாய்..
சகுந்தலையாய்..
நளாயினியாய்..
தேராய்..
புறாவாய்...
எந்தப் பாத்திரத்துக்குள் வாழ்கிறாய்..
எதற்குள் நான் அடங்க...
இறுக அடைத்துச் சொல்லி மூடிவிடேன்..
நான் கொதிப்பதாவது நிற்கும்.

Sunday 21 December 2014

கொஞ்சம்
கூட்டி
குறைத்து
இழுத்து
ஒளித்து
போர்த்தி
அப்பட்டமாய்க்
காட்டாமல்...
அடியெடுத்து வைத்து
அன்னமாய் வந்து
நம் காலடியில்
விழுவதுதான்
அழகு கவிதை!
காண்பவர்கள் கண் பட்டு
கண்ணூறி..
சுற்றிப் போடவேண்டும்
நம்
சம்பிரதாயப்படி சரஸ்வதி என்று.

நெல்லி
மா
ஆவாரை
நாரத்தை
சித்தத்துக்கு அழகு சிக்கனமாய்
இருந்தால்
மாறி..
தொடநினைத்தால்
ஊறு காய்
ருசிக்க நினைத்தால் புளி

எழுத்துக்களுக்குள் ஒழுகிகிடந்த
காதலை
ஒருங்கேயள்ளி
ஊறவைத்திருந்தேன்
நாயகன்..
நவரசநாயகன் வேண்டுமென
பிசிபிசுக்கும் வாசம்தேடியே..
இந்த முசுமுசுக்கை..
ஏன்..!அசையாமல் நிற்கிறாய்
அணிந்துகொள்
நானாட...
கவிநயமும்தானாட...
வா..!அழகுகாண..
கட்டிப்பிடி,
உனக்குள் இருக்கும் எனை எடுத்துக்
காட்டுகிறேன்
கலாரசிகனே....

உயிர்
மெய்
உயிர்மெய்
இதைவிட
எழுத்தோ..
சொல்லோ..
வார்தைகளோ..
பொருளோ...
கொண்டு
அலங்கரிக்க முடியாத
மெழுகு கடவுள்தான்
ஒவ்வொருவரின் தாய்.

அன்புடைத்து குழைகொடுக்கும்
ஆருயிரை
ஏங்க..
ஏனுங்க...
இஞ்சாருங்க..
மாமா..
அத்தான்..
எப்படி..எப்படி அழைக்க...
முப்பொருள்,
முத்தமிழ்,
முப்பால்,
மும்மலம்,
முச்சந்தி,
முப்பொழுது..
அழ கன் பூ என..
முக்கூட்டு மணத்துடன்
எனைகூட்டி திரிபவனை...
தாயுமானவனுமல்ல..
அ{ன்}னைத்துமான தாயும்
இருப்பவனை..
ஓர் அகராதியாக்குங்களேன்
தேடிப் பொருளறிய...
படிக்கும்..
ஓவ்வொரு பெண்ணும்
நினைத்து வைக்கனும்
இவந்தான்என...
ஒவ்வொரு ஆணும்
சிந்தி களிக்கனும்
இது நான்தானென...
கல்வெட்டில் கண்டெடுத்த கண்
ஆளனை எப்படித்தான் அழைக்க...


நீ கொடுத்தது
வெல்லமா...
இப்படி இனிக்கிறது வெட்கம்


நிழலை தூக்கிப்போடு
நிஜத்தில் நான் மிக
அழகு..
உன் அன்னையைப்போல்..
ஆனால் ஒன்று..
நேரம் காலம்
தெரியாதா என..
கடிந்து கொள்ளமாட்டேன்
ம்ம்கும் என்று..
தடையும்
விதிக்கமாட்டேன்..
இருந்தாலும்..
நான் உன்
அன்னையைப்போல்தான்..


பயற்றங்காய் பொரியல்
========================
முதலில் ..
பழுத்த மிளகாய்
{ஊசிமிளகாய் என்றால்
2போதும்}
சாதாரணமிளகாய்
என்றால் 3
பூண்டு -3பல்
சின்னவெங்காயம் -5
சீனி –அரை தே.கரண்டி
எலுமிச்சைசாறு-1
மே.கரண்டி
கொஞ்சம்
உப்பு சேர்த்து அரைத்தெடுக்கவும
்{தண்ணீர் இன்றி}
அடுத்து...
பயற்றங்காய்-10,12
சின்னவெங்காயம்-
15{அரிந்து வைத்துகொள்ளவும்
சட்டியில் தேவையான
அளவு தண்ணீர்
வைத்து கொதிக்கவிடவும்
கொதிக்கும்
போது கொஞ்சம்
உப்பு,ஒரு மே.கரண்டி எண்ணைவிடவும்
பின்
பயற்றங்காயை சிறுதுண்டுகளாக
வெட்டி இந்த கொதிக்கும்
நீரில் போட்டு மூடவும்
பாதி வெந்தவுடன்..அரை
த்து வைத்திருக்கும்
கலவையை கொட்டி
கிளறி மூடவும்
5நிமிடம் .பின்
அரிந்து வைத்திருக்கும்
சின்னவெங்காயத்த
ை சேர்த்து கிளறி இறக்கவும்
சுவையோ..சுவை காரமும்
சேர்ந்து...

Saturday 20 December 2014


செளசெள பொரியல்
=++=====++===++==
செளசெள – ஒன்று
தேங்காய்பூ-இரண்
டு அல்லது ஒன்றரை மே.கரண்டி
சின்னச்சீரகம்-ஒ
ரு தே.கரண்டி
ப .மிளகாய்-இரண்டு
சி.வெங்காயம்-எட்டில்
இருத்து பத்து {அளவைபொறுத்து}
சிறிதளவு மஞ்சள்தூள்
கறிவேப்பிலை கொஞ்சம்
============================
செய்முறை
--------------
நான் மேல்கூறிய
பொருட்கள்
{தேங்காய்பூ,சீர
கம்,ப.மிளகாய்,ச
ி.வெங்காயம்,மஞ்
சள்தூள்}
இவற்றை {இதுபோல்} உள்ள
இடிகல்லில்
போட்டு இடிக்கவும்
{ரொம்பவும் அல்ல}
தண்ணீர்விட்டு அரைக்கக்கூடாது.
பின் கருவேப்பலையும்
சேர்த்து நசிக்கவும்
செளசெளவை தோல்சீவி கழுவி சிறு,சிறு தண்டங்களாக
வெட்டி
வைக்கவும்.
பின் சமைக்கும்
பாத்திரத்தில் இந்தகாய்
அவியும் அளவு தண்ணீர்
எடுத்து அடுப்பில்
வைத்து கொதிக்கவைக்கவும
்.கொதித்தவுடன்
கொஞ்சம்
உப்பை சேர்க்கவும் .பின்
இந்த
காயை அதில்கொட்டி அவியவிடவும்.
முக்கால்பதம் வெந்ததும்
இடித்து வைத்திருக்கு அந்த
கலவையே இதில்
சேர்த்து,உப்பளவ
ு பார்த்து 2-3நிமிடம்
கிளறி இறக்கவும

பயற்றங்காய் பொரியல்
========================
முதலில் ..
பழுத்த மிளகாய்
{ஊசிமிளகாய் என்றால்
2போதும்}
சாதாரணமிளகாய் என்றால் 3
பூண்டு -3பல்
சின்னவெங்காயம் -5
சீனி –அரை தே.கரண்டி
எலுமிச்சைசாறு-1
மே.கரண்டி
கொஞ்சம்
உப்பு சேர்த்து அரைத்தெடுக்கவும
்{தண்ணீர் இன்றி}
அடுத்து...
பயற்றங்காய்-10,12
சின்னவெங்காயம்-
15{அரிந்து வைத்துகொள்ளவும்
சட்டியில் தேவையான
அளவு தண்ணீர்
வைத்து கொதிக்கவிடவும்
கொதிக்கும்
போது கொஞ்சம்
உப்பு,ஒரு மே.கரண்டி எண்ணைவிடவும்
பின்
பயற்றங்காயை சிறுதுண்டுகளாக
வெட்டி இந்த கொதிக்கும்
நீரில் போட்டு மூடவும்
பாதி வெந்தவுடன்..அரை
த்து வைத்திருக்கும்
கலவையை கொட்டி
கிளறி மூடவும்
5நிமிடம் .பின்
அரிந்து வைத்திருக்கும்
சின்னவெங்காயத்த
ை சேர்த்து கிளறி இறக்கவும்
சுவையோ..சுவை காரமும்
சேர்ந்து...

சக்கரவள்ளி இலை
===================
சுத்தம்
செய்து கழுவி தண்ணீரை நன்றாக
வடிகட்டவும்
{அதிக தண்ணீர்
தன்மை உடையது }
பின் கொஞ்சம்
பெரிதாகவே அரிந்து வைத்துகொள்ளவும்
{பொடியாக
அரியவேண்டாம்
பூண்டு 4
{அரிந்து வைத்துக்
கொள்ளவும்
பழுத்தமிளகாய்-1
{அரிந்து வைத்துகொள்ளவும்
சட்டியை அடுப்பில்
வைத்து அரிந்த
இலையைப் போடவும்
போட்ட
உடனேயே வெந்து கொஞ்சம்
தண்ணீர் விடும்
பரவாயில்லை...
அதில்
ஒரு தே.கரண்டி ஆலிவ்
எண்ணை{சமைக்கும்}
விட்டு அரிந்து வைத்திருக்கும்
சி.மிளகாய்,பூண்
டை போட்டு.. மிக,மிக
குறைவான
உப்பு சேர்க்கவும்{கீர
ைவகையில்
உப்பு தன்மைஇருப்பதால்}
அவ்வளவே...ஆரோக்கிய
சமையல் தயார்..


மாயனே...
மயில் வாகனனே...
வேய்யென்னை ஒற்றியெடுத்து
உன் காலடியைப் பார்..
மலரடி உன் பாதத்தில்..
பக்திமானடி நீயென..
பரிதாபம் வராதா...

இருள் கொடுத்தவனுக்கு
ஒளியாக..
குற்றம் செய்தவனுக்கு
துணையாக..
குருடாக்கியவனுக்கே
ஜோதிகொடுத்து..
கோயிலில் பாவை விளக்காய்
தன்
உயிரை எரித்து கரியாக்குகிறதே..
சுட்டவனையே
சுகப்படுத்துவதுதான் சுடரென
தெரிந்துகொள்!
காலனே!கடவுளே!
என்ன விமோசனம் கொடுக்கப்
போகிறாய்..
இந்த வெண்திரிக்கு!!


என்னை ரகசியமாகவே வைத்திரு
தொலைத்துவிடாதே..
காட்டியும் கொடுக்காதே...
உனக்கே உனக்குமட்டுமானதாக..
தெரியவந்தால்...
யாராவது கடத்திவிடுவார்கள்
அதனால்..
“உன் சேமிப்பை இழப்பாய்”
பாதிப்பால்..
என் நினைப்பால்..
காணத்துடிக்கும் முனைப்பால்..
மனநலம் குன்றித் தவிப்பாய்
நான் உனது கடவுச்சொல்
கண் உறங்கினாலும்
வாய்திறக்காதே கனவில் கூட..
கஷ்ரம் உனக்கும் எனக்கும்தான்
இணையத்தில்!!

Friday 19 December 2014

வானம் ஊற்றிக்கொண்டிரு
க்கிறது என்மேல்
கிளையின் இலைக்குள்
மறைந்திருந்தாலும்..
நனைய...நனைய..
நனைந்து..நனைந்து...
என் குரலைமட்டும் நனையாது..
குழைந்து..வளைந்து குதூகலமாய்..
நைந்துபோன நாளுக்கும்
எங்கோ ஒருவள் நேசித்துகொண்டிர
ுப்பாள்
சுவாசத்தைவிட்டே.. அவளுக்குமாய்...
அள்ளியள்ளி இன்னிசையாய்
கொடுக்கிறேன்
என்னலையென்று திசையை நோக்காதே..
சிற்றலை சங்கீதத்தை
எந்த அலைவரிசையில் சேர்ப்பாய்
உடையாத ஸ்வரத்தால்..
குலையாத சுருதியால்..
குழம்பாத அழகுடன்..
ஆசானின்றி,
தாளமின்றி நான் இசைப்பதை!
மாங்குயிலே...
பூங்குயிலே..
கவிகுயிலே...
தேன்குயிலே..
சின்னக்குயிலே...என்றெல்லாம்
வேண்டாம்
என்னகொடுக்கப்போகிறாய்..சொல்!சொ
ல்!!
இன்னலை பின்னலுக்குள் வைத்து
மென்னலையாய் பாடும் இந்த
ஆண்குயிலுக்கு..