Tuesday 24 February 2015

செய்வன திருந்தச் செய்யென..
என் பாட்டியும் சொல்லிருக்காக..
உன் பாட்டி உனக்கு ஊட்டிவிடவில்லையா..
திரும்பிருக்கே
திருகாதே.. வலிக்கும்
திருப்பிவிடேன் நேராய்...அந்தக் காதலை


நங்கூரம் இட்டிருக்கிறது நகரமுடியாமல்..
இந்தக் கப்பலை இழுபார்க்கலாம்..
உன் கவிதையால்..

Monday 23 February 2015


{மகா கொடுத்த படத்துக்காக..}
{1}
காற்றுன்னைக் காயவைத்திருக்கலாம்..
மழையுன்னை ஏமாற்றிருக்கலாம்..
இயற்கைகூடக் கண்மூடியிருந்திருக்கலாம்..
அன்பே...
வெடித்த உன் இதயம்கண்டு
நான் தொடுத்திருக்கும் அழகைப்பார் !
===================================
{2}
தவறுசெய்வது இயல்புதான்..
செய்தவைகளனைத்தும்
விழுந்து..
வெடித்துக்கிடக்கிறது பார்
புரிந்தணைத்து.
வேர்விட்டு வெளிவந்த விசுவாசக்கொடியால்

{1}
என்னுள்வைத்து அடைகாக்கத் தெரியவில்லை
அவன்மேல்கொண்ட காதலையும் பிரியத்தையும்
பிடியென...
வைத்தேன் உள்ளங்கையிலே இருகருவையும்
அட....
கைமாறாக
இந்த உயிர் உனக்குத்தானென
தூக்கிக் கொடுத்தானே ஆடென....
=================================
{2}
உயிர்களை உன்னதமாய் நினைக்கும் பிரியமானவன்
உதாசீனப்படுத்துவதுமில்லை..
உயிரைவாங்குவதுமில்லை..
அவர்களின் எதிர்காலம் என்கைகளில்தானென
நம்பிக்கையுடன் ஏந்துகிறான் தன் பெற்றோரை
அவனின் உயிரும் உடலும்..
அவள் கையில்தானென ஒப்படைக்கிறான்
அவளின் ஒளிவிளக்கான உள்ளத்தில் உறவாட வாவென
கிராமத்தன்பு இப்படித்தான்போலும் ஒட்டியொட்டி
முறையான அவளுடன் முறையுடனே ..

ஒருபுறம் உலகம்
மறுபுறம் வாழ்க்கை
அந்த வாழ்க்கையின் ஓரத்தில்தான்..
“நான்” என்ற ஒற்றையாணிவேரை
நம்பிப் பிடித்தே..
தள்ளிவிட்டேன் பட்டுவந்த துன்பங்களை
அந்தப் பள்ளத்திலே..

Sunday 15 February 2015


உனக்குப் பிடிக்கும் என்பதற்காக...
இந்தக் கவிதையை நான்விரும்பி எழுதினேன்
உன் பேனாவில் இருந்து கசிந்து வந்த மையினால்...

நீ
கத்தரி
காய்தான்....
ஒரு ஓட்டையும் இன்றி
ஒருவரும் கண்டுகொள்ளாமலும்...
உள்ளே புகுந்து
உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
உன் சதைக்குள்
உனக்குக் கூட தெரியாமலிருக்கலாம்


தூரதேசத்தில்..
எனக்கான அந்தச் சிறகு
ஒளிந்து கொண்டிருக்கின்றேன்
மரக் கிளைகளுக்குள்
என் இயல்லாமை படாதிருக்க
வல்லூறுகளின் பார்வையிலிருந்தும்..
என் கோலத்தையும்
மூடிக்கொண்டிருக்கிறேன்
விடியாதிருக்கும் வரை..


அந்தகாரி கை பிடிக்க
ரவி வர்மன் தூரிகை
உண்டு களித்து
உருவாக்கிய உதயசூரியன்.
தென்றலும்..நிலவும்..
காதலாயும்..காவலாயும்..
இந்த இளங்கதிருக்கு.


என்
குடிலுக்கு வரத்தானே...
வழி கேட்கிறாய்...
இதோ....

1 ம் குறுக்கு தெருவுக்கு வா ..!

4 ம் சந்தி தெரியும் அதிலிருந்து திரும்பு

3 ஆம் ஒழுங்கை வரும்

அந்த சந்தில்தான் இந்த பொந்து
மக்கு மாமா...மறக்காதே இந்த இலக்கத்தை


என் நகையை ஈடு வைத்துவிட்டேன்
அந்த
அடகு கடைக்காரனிடம்
வாயகம் வாட்டமாகத் தெரிகிறது
திருப்பமுடியாமல்...
மீட்டெடுக்கலாமென்றால்....
அந்த அடையாள‌ட்டை வேண்டும்போல...
என்னிடம்தான் “பற்றுசீட்டு”
அங்கு பற்றில்லை..
ஒரு எட்டு..அந்த கிராம் பேழையைக் காட்டேன்
அடுத்த வினாடியே... திருப்பிடுவேன் நகையை.

நீ
கை நாட்டு
நான்
கையெழுத்திட


பாவை படிக்க புரியும்
பாவை சுவைக்க ருசிக்கும்
பாவை பறித்தால் கசக்கும்
இதன்
உள்ளடக்கம்தான் சித்திரப்பாவை.


வாச {ல்} கருவேப்பிலையை
நீ பார்க்கவே மாட்டாயா...
கொஞ்சமாவது
கிள்ளிப் போட்டு தாளித்திப் பாரேன்....
மணக்க....


கரு கருவென. கருக்கட்டி
வளர்ந்துகொண்டே வருகிறது
நான்
திருடி உண்ட
அரும்பெரும் காட்சியகத்தால்...
காரணம் நீதான்
ரணமாகும் முன்
வா...
அருகே வா...
தொட்டுப்பார்
உன்னாலான கரு துடிக்கிறது
கரு பையில் அல்ல..
இருதயத்தில்..!

Saturday 14 February 2015


முள் அசட்டையாய்...
இருக்கும் போதுதானே...
கொய்துவிட்டாய்....
அதிஷ்ரகாரா...


முள் அசட்டையாய்...
இருக்கும் போதுதானே...
கொய்துவிட்டாய்....
அதிஷ்ரகாரா...


மூச்சு வாங்க வாங்க
இறைக்கிறேன் என் பேச்சை
ஓடுவதை...
பாத்தி கட்டுகிறான்
தாகம் தீர...
மோகமில்லா அந்த முள்மரமோ
உறிஞ்சி எடுக்கிறது ஈரத்தை.


குழந்தை மனம்
பெண் மனம்
என் மனம் என..
அவன்மட்டும்
அடுக்கடுக்காய் சட்டைமாட்டி..
நான்
அம்மணமாய்...

Friday 13 February 2015


நெய்மணக்கும்
என் கைமணம்
உனக்குத் தெரியும்தானே....
வா……!
நெய் மணக்க..
கடைந்தெடுத்தேன் அல்லவா....

ஹார்மோன் அதிகம் சுரப்பதால்..
மண்ணைவாரிப் போடுகிறது தன்தலையிலே..
மனிதரை அடித்துக் கொல்கிறது..
மரங்களைப் பிடுங்கியழிக்கிறது
மனிதன் சொல்கிறான்
மதம்பிடித்துப் போயிருப்பதால்தானாம்...
ஓ.ஓ.ஓ.ஓ.ஓ...
அது எங்கு சென்று கற்றிருக்கும் சமயத்தை

சுற்றிப் புதர்வளர..
புரிந்துணர்வின்றி
கொத்திக் கொத்தி....
கோடாலியொன்று கழன்று விழுந்தன்று
இன்று
பிடி..போட்டு
பாதைதேடி வருகிறது ..
வெட்டிவெளியாக்கி..
சுற்றிக் காடாக்க..
மரமே...! கற்ற பாடத்தை மறக்காதே.!!

என்னை
நீ..
விட்டுக் கொடுத்துவிடேன்
வேங்கைக்கு..

என்னை
நீ..
விட்டுக் கொடுத்துவிடேன்
வேங்கைக்கு..

சூடாமணியே..
சுடர்விளக்கே..
சுகந்தமே..
என் பந்தம் உனக்குத் தேவையடி..

மணிவிளக்கே..
மாமன்னனே..
மாடப்புறாவே
உன் மனதையல்லவா
மாட்டிவைத்திருக்கிறாய்
இந்த மணிப்புறாவில்
நீ..
பந்தத்தைப் பிடி..
நாம் பாதையில் பயணிக்க


அன்புக் கட்டியில்..
தேனான பிரியங்களை ஊற்றி..
ஊறவைத்து இளக..
என் ஆக்கம் தேடி..
பக்கம் வந்து..
உண்டு..
உணர்வை ரசித்து
ஊக்கமளித்து,
ஊட்டம் ஊட்டும்..
என் செல்லச் செல்லங்களே
உங்கள் அனைவருக்கும்
என் இதயம் கனிந்த..அன்பர்தின .வாழ்த்துகள்..

Sunday 8 February 2015

புகையின்றி..
மறைக்காமல்
கருவிக்கொள்ளாமல்..
துருவி மருவி, பரவி... அப்படியே..
புகைபடக் கருவிகொண்டுதான் எடுத்தேன்
நிழல் தெரியும் அந்த கருவிக்கு
இது நான்தானே...


என் பொம்முகுட்டி அம்மாவுக்காக...
இப்போ செய்தேன்...{வருவாக..}
குழந்தைகளுக்கு உருவத்தைவிட...நிறங்கள்தான்
அவர்கள் கண்ணைக் கவரும்,தெரியும்...

சிவப்பாக..
வெளிச்சமாக..
இருந்தால்...
தெருமாறி பெறுமதி கெட்டு
முத்திரை கேட்டு வரலாமா..
இது என்ன தபால் கந்தோரா..
தால் ஆடும்முன்
தலைதெறிக்க ஓடு
இல்லை..
தலைமறைவாகு!!!


நான்னென்றால்...
அது நீயும் நானும்..
நீயென்றால்..
அது நானும் நீயும்...

ஓடுமீன் ஓட...
உறுமீன் வருமளவும்..
வாடி...


சூரியனும் நெருங்காதே..
சந்திரனும் பார்க்காதே..
அடிமட்டத் தண்ணீர் பட்டால் போதும்
நான் அல்லி உயிர்வாழ...


நீ
பிறந்து
வாழ்ந்து
போய் சேர்ந்துவிட்டாய்..
நான்
வந்து சேர்ந்து
வாழ்ந்து
பிறந்துகொண்டிருக்கிறேன்....
ஓவ்வொரு இடர்களாலும்...

காந்தியே..!
நீ வாங்கி
கொடுத்துச் சென்ற மிட்டாய்
இன்னும்..
இந்த ஜெயந்திக்கு எட்டாதபடியால்...
இனிப்பை எப்படிப் பகிர்வது..
நீ பிறந்த நாளில்.


தாத்தா.......
ஆத்தாவும் இல்ல
அப்புவும் இல்ல
எப்பவும் நான் பறக்கிறேன்தான்
நீ வாகிக் கொடுத்ததை யாரும் தருவதாயில்லை
ஏங்கிப்போய்...

தாங்கிப் பாத்தேன்
வீங்கிப்போனதுதான் என் வீரம்
பாங்கிக்குகூட பயம் தேங்கியே...

தூங்கிகிடந்த துணிவை தூசிதட்டினேன்..
நீ கொடுத்ததை எனக்கு நானே
இருபாகங்களிலும் கட்டிகிட்டேன்
யாருக்கும் அடிமையில்லையென..
வடிவமைத்து விரிகிறேன்...

தாத்தா....
நான் உன் பேத்தியல்லவா...
மிதிப்பேனா !

மதித்துதான்...
கழட்டிக் கொடுக்கவேமாட்டேன்
நீவாங்கிக் கொடுத்த அந்த அழகுசட்டையை
கடவுள் வந்து கேட்டாலும்....

Friday 6 February 2015

காட்டுவாசியே...
இந்த விண் அப்பம்
கூட்டி எய்கிறது
பட்டுப் போகட்டும்..
பன்னாடை பாளைக்குள்
விரிந்து வரட்டும் சொரிந்த மலராய்..
நான் குறிவைத்து கொய்ய நினைத்தது


ஹரிஅணையே...
காரணமாம் காலதாமதத்துக்கு
கரிகாலன் அணைகூட தூரமாய்..
சுவாமி...
பஞ்சணையைக் கொஞ்சம் கவனிக்கமாட்டாயா..
பிடித்திருப்பதை அரிந்துவிடச் சொல்லேன்
கவ்விருக்கும் காலன் கழிந்துபோகட்டும்!


சிமிழுக்குள்
அற்புத பேழைக்குள்தான்
ஒளித்து வைத்திருந்தேன்
அந்த அபாயத்தை
அதற்குள் இருக்கும் வரைதான் ..
ஆபத்து இல்லையென்பதால்
வெளிப்படுத்தாமல்..

நீ
ஏன்..
எதிர்பட்டாய்..
முகம் காட்டினாய்..
ஊற்றிவிட்டேன் அந்த பேழைக்குள் இருந்ததை
இப்போ...
சிதைந்திருக்க வேண்டுமே..
உன் இதயம் இந்த அமிலத்தால்....


ஒரு தங்கச் சுரங்கம்
மூடப்பட்டுக் கிடந்தது
சூழப்பட்ட பாறைகளால்

தேடப்பட்டு வந்த கண்ணில்..
தென்பட்டது முதல்பார்வையிலே..
துளையிட்டு துவாரமிட்டு ஊடுருவி
சொல்லடித்து செல்லத் துடித்தது

கல்மேலே செதுக்கி வைத்த பாசத்தால்
வில்லாய் வளைந்து வழிகாட்ட
மெல்லபிடித்தது உள்ளறையை

திரண்டு வந்த காதல்..
உருண்டு புரண்டு கட்டுண்டு
பிடித்து ஒளிந்து விளையாடி
வெடித்து சிதறி மறைந்தது

கொள்ளையடித்துச் செல்லும் போது...
கொன்றுபோட்டுப் போகும்போது ....
கன்றை மறந்து போனாயே...
கல்லை கலங்க வைத்தாயே...
உள்ளம் ஒன்று உனக்கில்லை
உள்ளே அன்பென்ற ஒன்றும் அங்கில்லை
கடைசிப் பார்வை பாத்தாயே...
காலம்போன கட்டைமேலே ..கள்ளா..!
கள்ளிபோல குத்தினாலும் கள்ளுப்போல தேடுதே..
இந்த சொல்லுகேளா ஊமை இதயம்
அன்பே ! என்னன்பே!! உன்னன்பை!!

Thursday 5 February 2015


வெங்காயம்...!!
உள்ளே உரிக்காதே..!
கண்ணில் நீர்வரும்
எனக்கல்ல !உனக்குத்தான்

நீர் இன்றி
நிறம் குன்றி
மணம் இன்றி
மடிந்து,
துடித்து,
வாடி...
வார் கொஞ்சம் ஈரத்தை
பின்பார்
பஞ்சம் போய்
நெஞ்சம் பிடிக்கும்.


உயிருக்குள் உய்யும் மெய்யே..
தடம் பதித்துச் செல்லும் அழகும்..
ஒழுகிக் கசிந்துபோகும் அன்பும்...
மசித்த பருப்புபோல் உருவம் காணாமல்..

சகித்தே சுமக்கும் பாங்கும்..
நீ
வசித்து வாழும் கூட்டை
உசத்திப் பார்க்க வைக்கிறாய்..
உணர்வுக் கொம்பின் உதவியால்..
கையும் களவுமாய் பிடித்தேன்

நான் கழன்றால்...ஓடு
நீ மடிந்தால்..உயிர்
உயிரோடு இருக்கும்போதே...
சொல்லிவிடேன்......

கலைமகளே...!
உன் கைப்பொருள் நான்
எப்பொருளும்..
எம்மனமும்..
எவ்மணமும்..
எக்கணமும்..
உள்வாங்க..
மீட்டிக்காட்டும் என் மீனாம்பிகையே..!
உன்தாள் சரணம்
தில்லைக்கூத்தரே சரணம்
என் மானசீகக் குருவே..காளமேகரே..!
சரணம்!சரணம்!! சரணம்!!!

{அனைத்து உள்ளங்களுக்கும் ,உள்ளங்களிலும் அணைத்து எம்மொழி ஊற..
அம்பிகை அருள்வாரென..நான் கைகூப்பியே...

எண்ணம் இயங்க..
மனம் பொங்க..
கண்துலாவி..
காணத்துடிக்கும் இந்த இனிப்பை
கை கொள்ளும்வரை அள்ளுங்களேன்
கரைந்தொட்டாமல் கண்ணியமாக!

கவிதை கொடுத்துக் காற்றை வாங்கி
காதல் வீங்கிக் கிடக்கிறதே
ஏங்கி..
ஏங்கி..
ஓங்கி
ஒன்று கொடேன்
அறை
கறைபடாமல் பார்த்து
நாலிதழும் நயன்பட கன்னம் வைத்தே

பஞ்சும் நெருப்பும் பக்கத்தில்
பற்றி...
பிடித்து..
அணைவதில்லை
மெய்யாலும் ..
விழுது உருகுவதில்லை
மெய்வாளும்..
கூர்மை மழுங்குவதில்லை
மெய்வாழும்.. வீணைக்குள்ளே !

எண்பாட்டில் நானிருக்க.
தண்பாட்டில் அவனிருக்க..
பண்பாட்டின் பதம் பிழைத்து பதராவதுமில்லை
தும்பை மழித்த துளசிக்கூட்டுக்குள்ளேயிருந்து
கற்பின் நறுமணம் காற்றில் வருகிறதா...

கனவு


நானும்...
கண்டேன் கனவு
அதை நனவாக்கப் பாடுபட்டேன்
சமூகம் பட்டதுபாடு..
ஏற்கமுடியாதெனத் துள்ளிக்குதித்து
என்னால் அவர்களின் ஆட்டத்துக்கு
ஈடாக..
ஒத்துழைக்க முடியவில்லை
காலில்லாமல் ..
கைபிடிக்கக் கனவுகண்டால் பலிக்குமா..
நாக்குவழிக்கும் நல்லபாம்புகள் இருக்கும்வரை
கனவு நனைகிறது குடைபிடிக்க யாருமின்றி..

Wednesday 4 February 2015

ஒரு கல்லைக் கொடு
கலைவடிக்கின்றேன்
ஒரு சொல்லைக் கொடு
கவிதையாக்குவேன்
பொல்லைக் கொடு
புல்லாங்குழல் பிறந்துவரும்
வில்லைக் கொடு
விசயனைப் பார்..
ஏட்டைக் கொடு
காவியம் காண்பாய்
இமயத்தைக் காட்டு..
ஏறிவிடுகிறேன் ம்ம்ம் என்று சொல்லும் முன்பே
இதயத்தைமட்டும் பருந்துகளுக்கு இரையாக்காதே
என்னியக்கம் நின்று நீயடக்கம் செய்ய நேரிடும்

தொப்பட்டமாய் ..நனைவது
அப்பட்டமாய் தெரிகிறதே..
காதலென......