Sunday 30 November 2014

உறவு கூட்டுறவு
பாசம் அன்பின் நேசம்
இளமை
இறக்கை
ஈரம்
எண்ணம்
எதிர்காலம்
வண்ணம்
வசந்தம் இன்னு..இன்னும்..
என..
அத்தனையும் இழுத்தடைத்து
கத்தக்கத்த..குத்திக்குத்தி..
முள்வேலி போட்டது அரசமரகிளைகள்
உயிரைக்கூட..அமிலம் ஊற்றிக் கொன்றுவிட்டன
உடல்தான் இங்கே..
இந்த உடலுக்கும்கூட.எத்தனை கழுகுகள்

உண்பதை மறந்து.
உறக்கத்தை துறந்து..
பற்றுதல் வெறுத்து..
இந்த பிரபஞ்சத்தையே..எதிர்த்து..

கம்பிகளை முறுக்கி
முட்களை உடைத்து
இரும்புகளை அடித்து
கம்புகளை மடக்கி
உண்ணப் பழகிக்கொண்டிருக்கின்றேன்..


இந்த நான்கும்..
ஒன்று அன்பு
இன்னொன்று பாசம்
மற்றொன்று பிரியம்
அடுத்த ஒன்று காதல்
எல்லாமே ..அதேவகையில்..
இதில் இருக்கும் ..
நிறத்தையோ
அழகையோ..
மணத்தையோ..
பிரிக்கமுடியாதல்லவா..
அதுதான் மலர்!
ஆனால்..
நீ..... நீ..... நீ......
இரு வருகிறேன்..அவசரப்படாதே
ஒவ்வொன்றின் அடியிலும் தாங்கி இருக்கே ..
அந்த தண்டு கள் ..அது நீதானடா மலர்வண்ணா!!


தொல்லை தருகின்றதே..
143......இந்த தொலைபேசி எண்
அன்பே..
கொஞ்சம் அடித்துச் சொல்லேன்...

Saturday 29 November 2014

l
என் கவனத்தில் எத்தனை அக்கறை
காந்தரூபா....
என் இதயத்தை இவன் வைத்திருப்பதால்தான்
இப்படித் துடிக்கின்றானோ..
என் பிடிவாதத்தைத் தள்ளித் தளர்த்தி..
உன் சிறக்குக்குள் வந்தால்...
கடிவாளம் போடுவாயா..அனுதினமும்
திளைத்தலில் நீ திவாகரன் என்றால்..
நான் திவ்வியபாரதி..
வா....
அந்தக் கம்பசூத்திரத்துக்கு விடைகாணும் முன்
காதல்சூத்திரத்தைக் கொடுத்துவிடுகிறேன்
உன் அன்புக்கு நான் அடிமை என்ற சாசனம் எழுதி!!


கசடு இல்லா அன்புக்கு..
கணவனின் காணிக்கை
ஈடில்லா இல்லறத்தின்
ஈரப்பதம் உலர...
நேசித்த காதலொன்று
சுவாசிக்க மறந்தது..

காலமெல்லாம் ..
காதலை உண்டுவாழும் தாஜ்மஹால்

ஏவாகுட்டியிடம் கேட்டேன்
செல்லம்..
யூ லவ் மீ டாலிங்...
யெஸ்..அன்ரிகலாமா என்றாள்
எவ்வளவு எனக் கேட்டேன்..
என்கைகள் இரண்டையும் இணைக்காமல்
விரித்திக்காட்டி..
இவ்வளவா ..என்றேன்...

ஒரு செல்லச் சிரிப்புடன்..

தன் பிஞ்சுக் கைகள் இரண்டையும்
தன்னால் முடிந்தவரை அகலவிரித்துக்..காட்டினாள்
அதுமட்டுமல்ல...
இதற்குமேல் என்னால் முடியவில்லையே..
கையை அகட்ட என்றாளே..பார்க்கலாம்..
அள்ளியணைத்து..முத்தமாகச் சொரிந்தேன்..

இந்த உணர்வை...
எப்படி எழுதமுடியும்..
கவிதையாய்...
கட்டுரையாய்..
சிறுகதையாய்..
தொடர்கதையாய்..
இல்லையேல்.. விபரிக்கத்தான் முடியுமா...
விசுவாசமான அவளன்பையும்...
இன்னும் விபரமறியாத.. பக்தியையும்..
அதைக்காட்சியைக் காணத உங்களிடம்...!!

Friday 28 November 2014


இன்று நட்பின் தினமாமே...
அப்படியா..
அப்போ... ஒவ்வொரு..
நாட்களிலும் இல்லையா..
வேறு எந்த உறவில் நட்பு இருந்திருக்கும்..
இத்தனை நாட்களாய்.....
.
நட்பு....
கொதிக்கும் பாவல்ல ..சேர்த்துப் பிசைய..
வத்தல்குழம்பு அல்ல வழித்துத் தின்ன..
சொத்தைகத்தரிகாய் அல்ல தூக்கிப்போட..
நாறிப்போன மீன் அல்ல..கருவாடாக்க..

நாடி....
நாரிலே தொடுத்தெடுத்த மலர்!
நாவிலே..நாற்றமில்லா சொல்!
பாவிலே பதுங்கிருக்கும் வாள்!
மொழியிலே பிடித்திருக்கும் அழகு!
உடலோடு சேரா உறவு!
உள்ளத்தில் உவகை ஊறும் கள்!

நட்புத்தான் என..கற்பை கேட்காத தாயுமானவன்!
தோழிதான் என..துரோகம் நினைக்காத தந்தையானவள்

நட்புக்கும் ! நல்லிணக்கத்துக்கும் !! நம்பிக்கைக்கும்!!!
நீ.....நீ....வாடா.....நீங்கள்... நீங்கள் மல்லிகையேதான் வசந்தத்தின் நட்


அத்திமொட்டின் கட்டவிழ்ப்பும்..
ஆத்திசூடியின் அழகமைப்பும்..
கண்டிருக்கின்றாயா...?

ஆடைக்குள்ளே நெய்மறைவும்
அழகுக்குள்ளே உன் குறையும்..
அறிந்திருப்பாயா...?

பூவிரியும் ஓசையும்..
புல்பேசும் பாஷையும்..
உணர்ந்திருப்பாயா...?

ஊசிசொல்லும் உணர்வையும்..
பாசிகொள்ளும் காதலையும்...
கேட்டிருப்பாயா..?

இதேபோல்..
என்காதல் விரியும்போது..
உனக்கு கேட்டிருக்க வாய்பில்லை..
மெளனத்தைப் பூட்டியே..
மாரடைப்பு செய்கிறேன்...
முற்றித் துடிக்கிறேன்...
முற்றும் துறந்து தவிக்கிறேன்
கட்டிவைத்திருக்கும் மொட்டைப்போல்..

காதல் வந்தால்..சொல்லியனுப்பு
உயிரோடிருந்தால்..வருகிறேன்..!!


சுண்ணாம்புடன் வண்ணமிருந்தால்..
சுவரழகு..

சுவரிலே வண்ணமிருந்தால்..
எண்ணமழகு..

எண்ணத்திலே இனிப்பிருந்தால்..
வாழ்கையழகு..

வாழ்க்கையிலே பிடிப்பிருந்தால்..
வழியழகு...

வழியிலே ஒளியிருந்தால்
விடியலழகு..

விடியலில் நீ இருந்தால்..
நானழகு..
என்னிலே நீ இருந்தால்..
நாம் அழகு!

இப்படி ..
வினோதமாய்..
விசித்திரமாய்..
பவித்திரமாய்..
வலிக்காமல்..
பூவில்..
தேன் எடுக்க எங்கு கற்றாய்..
கொஞ்சம் உதவேன் அவனுக்கு..
இதேமுறையில்...
ஒன்றும்விடாமல்..
என்னுள் இருக்கும் அவனின் செளகந்தம்
செளந்தரியம் மற்றும் .......
உறிஞ்சி எடுத்துச் செல்லவும்...
நான் உதிரவும்...
அவனிக்கிந்த அலகைக் கொடுத்துதவேன்

காலையும்..
மாலையும்..
பவளமல்லிகொண்டு..
பூ சாரி..ன் அர்சனை..
அது கல் சிலைபோலும்...
ஈரத்தைக் கசியவிடாமலே..
பூசாரியின் பூஜைக்காகவே..


நீ பூமி..
பொழிவதைத் தாங்கிக் கொள்கிறாய்
உறிஞ்சவும் செய்கின்றாய்..
உன்மேலெழுந்திருக்கும் வெள்ளம் நான்..
ஆவியாகி..ஆவியாகி...
மீண்டும் உன்மேல் வந்து வந்து விழுகின்றேன்.

வான்..
கடல்..
நிலமென..
முப்படைகளாலும்..
தாக்குதல் நடைபெற்றுக் கொண்டே..
நான் எப்படைக்குள் ஒளிவது...
அடிப்படையில் ..
அவனழகு ஒட்டியிருப்பதால்..
வெளிப்படையாய் காட்டுமா இரும்புப்பட்டறை
ஒட்டறையில் நான் தங்கிருந்து உடல்காவல் செய்கிறேன்
எரிபடை வீசினாலும்... எடுத்தெறிந்து பேசினாலும்..
அசங்காமல் கசங்காமல்...அணைக்கவரும் புலியை..
ஈழத்துமானும்.. அடைமானம் வைத்தே மனதை
மானம் அடையென... இழுத்தணைத்தே இடுகிறது முத்தம்


எனக்கும் சிறகிருக்கிறது உன்னைப்போல்..
பறத்தலுக்குத்தான் அவன் வேண்டும்..

எதையோ.தொலைத்து..
எதையோ..தேடி..
களைத்து..
காணாமல் சுருண்டு....
தொட்டுக்கொள்ளாமலே..
அதேசமயம் துவளாமலே..
வந்துசெல்லும் அலைகள் போல....

ஓடிவந்து நானும்...
காத்திருக்கும் நீயும்..
எப்போ சங்கமிப்பது..
நுரைதின்றா..பசியடங்கும்!!


கருத்தின்றிக் கிடக்கின்றன
கவிதைகள்..
வெள்ளைத் தாள்களில் எழுதப்பட்டதால்.

கொஞ்சம் தாண்டிவந்து
புத்தியைத் தூண்டி
படிக்க முற்படுங்களேன்..
தீபச்சுடர்களே.
.
இது இயல்...
நீ இசை...
வாழ்வு நாடகந்தானென எடுத்துரைத்து
திரு மணம்வீச....
கண்நிறைந்த கவிதைகளிடமும்..
கசியட்டுமே கருணை.. கல்நெஞ்சங்களே!!

Thursday 27 November 2014

உமைக்கு மகனாய்..
அழகன் அறிவழகனே..
ஒளிக்கு வாரிசாய்..
ஒளிரும் ஒளிவிளக்கே..
உலகாளப்போகும் உத்தமராசாவே..
நவமணியே...
நல்விதையே..
நறுமலரே..
நாவலனே...
உன்னால் பெற்றவரைப் போற்ற.. மற்றவர் வாழ்த்த..
மாநிலமும் அதிசயிக்க..மனிதம் உயிர்பிழைக்க
வாழடா கண்ணே..கண்மணியே..கல்கண்டே.
பொன்னுலகத்தின் புதுவரவே..
அகவை ஒன்றில் அடியெட்டுத்து வைத்து
தத்திவரும் தவப்புதல்வன் “தியாகேஷ்” யை
பெற்றவரும்...
பெறாமகனை தென்றலும்....திங்களும்
நீங்களும்...
வாழ்த்துங்களேன்..
செல்லத்தை வாழ்வாங்கு வாழ்ளென்று!
====================================
{என் கைவண்ணத்தில் உருவான கேக்கிது
செல்லகுட்டிக்காக...
சுற்றிருக்கும் புல்லில் இருந்து..அத்தனையும் ஜசீங்..


இயற்கையை உடுத்துப்பாரென்று..
அணைத்துச் சென்றான் வனத்துக்கு..
கண்ணில் கண்டெதெல்லாம்
கடைந்தெடுத்துக் கொடுத்தான்
அரங்கம் அமைத்து
அதிலே ஆரணங்கென்னை அமரவைத்து.
ஆட்சிசெய்யெனக் காட்சியமைத்து
நேசிப்பை நிமிடமில்லாமல் நிறுத்தி
பூசிப்பை புண்ணியதலமாய்யெண்ணி...
தோரணங்களை சுற்றவரைக்கட்டி
உற்சவம் பாரென ஊட்டிவிட்டு..
ஆடச்சொல்லி..
விளையாடச்சொல்லி...
அத்தனையும் ஆய்ந்து கொடுத்து
உணர்வுக்கொம்பைத் தீட்டி..
உன்னிப்பை என்னிலே பதித்து
காவல் இருக்கும் கலைமானை
கண்டு கண்ணூராதீர்கள் நீங்களும்...!!

தகுதிக்கேற்ப
அதில்..
சில சொட்டுச் சொட்டாய் பேச்சைவிடு தேனாக..
கரு வெள்ளையாக இருக்கட்டும்..
இம்மூன்றையும் குழைந்துப் பூசிப்பாரேன்..
பின்..மின்னும்..
உன் அழகைக் கண்டு நீயே ஆச்சரியப்படக்கூடும்..

எங்க வீட்டு கொழுக்கட்டை


{எங்கவீட்டு கொழுக்கட்டை,மோதகம் இனிப்பை சுவைத்து
மொழியைப் படித்து..பிடித்துச் செல்லுங்களேன் உங்களுடனேயே..}
உலகமக்கள் அனைவரையும் ..ஆசீர்வதிப்பாராக...
முழுமுதல் கடவுளாகிய..சித்திவினாயகர்
=============================================================
மதம் எதுவானாலும் ..மனிதன் நல்லவனாக இருக்கவேண்டும்.
முதல் தெய்வம் – தாய்,தந்தை
மிகமிக முக்கிய நாள் – இன்று
மிகப்பெரிய வெகுமதி- மன்னிப்பு
மிகவும் வேண்டாதது _ வெறுப்பு
மிகப்பெரிய தேவை- சமயோசிதம்
மிகவும் கொடிய நோய்- பேராசை
மிகவும் சுலபமானது- குற்றம் காணல்
மிகவும் கீழ்தரமானது-பொறாமை
நம்பக் கூடாதது- வதந்தி
செய்யக்கூடாதது-துரோகம்
செய்யவேண்டியது-உதவி
உயர்வுக்கு வழி-உழைப்பு
நழுவக்கூடாதது –வாய்ப்பு
பிரியக்கூடாதது –நட்பு
தான் வாழ பிறரைக் கெடுக்காதே!!
===========================


கண்கள்வழி விழுந்து புற்றுக்குள்
பற்றென..
ஜாடை காட்டுகின்றது ஈரம்
இளகியே வெளிவருகிறது ஈசல்
இரண்டறக் கலக்கிறது
பின்..
காலமாகிறது .கண்ணாளன் முன்னே..
ஏக்கத்தால்.. ஈரமும் இறக்கின்றது
காய்ந்தே...


கண்கள்வழி விழுந்து புற்றுக்குள்
பற்றென..
ஜாடை காட்டுகின்றது ஈரம்
இளகியே வெளிவருகிறது ஈசல்
இரண்டறக் கலக்கிறது
பின்..
காலமாகிறது .கண்ணாளன் முன்னே..
ஏக்கத்தால்.. ஈரமும் இறக்கின்றது
காய்ந்தே...

மதிசூதனனும் மந்தமாருதமும்..
அதிமதுரமாய்..
ஆலோகம் வீச..
அளவளாவி இருப்பது பிருந்தாவனமல்ல..
கலாபவனத்தில்..!
கலாசாலையில் கற்ற கலாசாரத்துடன்..
கலாரசிகர்களே....கலாதியாக இருக்கின்றோமா..?
கலாரசனை எனச்சொல்லி...
கலாநிதிப் பட்டம் கொடுங்களேன்..
கலாபூர்வமாக அமர்ந்திருக்கும் எங்களுக்கு..!!


அட........
கொத்திக் கொத்தி..
கூடாக்கிவிட்டதே...


இது {nasi lemak } என்ற ஒருவகை உணவு {சிங்கையில் மலே இனத்தின்} ஆனால் இங்குதான் சாதி,இனமத பேதமே கிடையாதே..எல்லோரும் சமைப்போம் உண்ணுவோம், ஒற்றுமையாக..
இதோ..இன்று என் சமையல்..
இதுபற்றி ,செய்யும்முறை சொல்கிறேன் நீங்களும் சுவைக்கலாம்..ஆனால்..இப்போது..அதிகமான பிஸி.. பிஸி..வருகிறேன்..செய்முறையுடன்..அதுவரை.. இதற்குள் என்னவெல்லாம் என..எண்ணிகிட்டே இருங்க..


திருப்பாதே முகத்தை
கொஞ்சம்..
சீர்செய்ய வேண்டும்
கலித்தொகை கூட்டி..
சிந்தியல் வெண்பாவே..!


பட்டுப்போகாமல்..
ஆலமரத்தின் விழுது பிடித்து..
அடியெடுத்து வைக்கிறது அல்லித்தண்டு...

இதயவீணையில்...
இசைக்கிறது..
இன்பமே..நீயென் இதயகனியென..


இதயத்தைத் திறந்து ..
காதல்சிறகை விரித்து
சுதந்திரமாய்..
தென்றலில் கலக்க..
காத்திருக்கிறேன் கண்ணாளா
கூடுசேர வாடா.. உதயனே..!
மூடிக்கொள்வோம் ..நிலாவராமல்

நீ...
மெய்யில்..
ஊற்றிக்கொண்டிருக்கும் உணர்வுதான்
இங்கே..
காட்டிக்கொண்டிருக்கிறது
என்மேல் உயிரென..

இன்று கருவிலிருந்து ..
உருவி விழுந்த நாளாமே.. தமிழரசி
எங்களின் பசிபோக்கும் ஊர்வசிக்கு
கல்வி,செல்வம்,வீரம் என...
இல்லாமலில்லை...
இருந்தும்..
குறையாமல் நிரப்பு கலைவாணியே..!
கல்கண்டு..தமிழுக்கு !

நூலில் பட்டம்விடுபவளல்ல..
பட்டம்பெற்ற தமிழரசி
பட்டாம்பூச்சி..
கொட்டத்தை அடக்கும் கொடுக்குத் தேள்
ஊக்கம் கொடுக்கும் ஊடகம்
ஊட்டியெனச் சொல்லும் பா ரகம்
காட்டியோ..கூட்டியோ ..
கொடுத்துவிட்டால் பெண்மை இழிவென..
பாய்ந்துவரும் வேங்கையிவள்
பாசக்காரப் பொம்மையிவள்
பாரதியின் கண்ணமாவும்...!

என் தோழி..
என்ன.. கொஞ்சம் சோம்பேறி.
.
எம்பாங்கி
பாம்மேறிப் படுத்திருக்கும் பல்லக்கில்
பாதம்தாங்கிருக்கும் இலக்குமி
இலவம் பஞ்சு..
இலவசமாய் கொடுக்கும் இளநகை..
இலக்கணத்தின் இழங்கிழை
இலட்டுப்போல் இனிப்பு..
இருந்தாலும்...
கர்வம்.. கனம்.. தலைமுறைக்கு..
.
இருள்போக்கும் இல்லக்கிழத்தியாள்
அருள் ஊட்டும் அன்புதாயிவள்

எங்களுக்கிக் கிடைத்த
காதலி..
தோழி..
சகோதரி
ராஸ்கல்
ராட்ஸசி
ரசிகை
ரஞ்சிதம்
இரத்தினக் கம்பளத்தில் நடந்துவா தமிழரசி!
ஆராதனை செய்யும் எங்களின் அகராதி!
அம்பாளின் ஆசிபெற்று..
ஆள்வாய் என்றென்றும் அரசாட்சி! தமிழரசியே!!


பிடி இத்துக்கிடக்கிறது..
ஒரு பிடிகொடேன்..
பிடிபோட
பிடிமானம் இருந்தால்தானே
வருமானம் வரும்
அடிப்பிடிக்காமல்..
வருமானம் வந்தால்தான்...
“சில்லறை” விழும் கல் ஆ பெட்டியில்...
காலமெல்லாம் வாழ..!


கண்ணை மூடிக்கோ...
கொழித்து வழிகிறது அழகு


கேட்டால்...
மனசு வருவதில்லை..
மறுக்க..
மனசை மட்டும் கேட்காதே


கேட்டால்...
மனசு வருவதில்லை..
மறுக்க..
மனசை மட்டும் கேட்காதே

Wednesday 26 November 2014


இது ஒரு கவிதைத்தொகுப்பு
யாரோ...
ஒரு கவிஞன் எழுதிருக்கின்றான்

கட்டிக்கட்டி வைத்திருக்கிறான்
ஊட்டிபோல்...
கொட்டிக்கொட்டிக் குவித்திருக்கிறான்
முத்துப்போல்...
விட்டு..விட்டுப் போயிருக்கிறான்
விருந்துபோல்...

பாசஊடலாய்..
பிரியத்தின் புகட்டலாய்.
.காதலின் தீட்டலும்..
செல்லமாய் திட்டலும்..
கொஞ்சமாய் அதட்டலும்..
கூதலுக்கு விரிப்புமாய்..

பக்கமெல்லாம் பழுத்துக் கிடக்கிறது
பரிவன்பு.. சொர்க்கம் பறிக்க வாவென..
பிழிந்து வைத்திருக்கிறான் தேன்வதையை..!
சுற்றி..
காற்றாடி..
கூடி...
கூத்தாடி...
பாடி..
பாவைக்க வாவென...

படித்து முடித்ததும்
பார்க்கத் தோணுகிறது
இந்த எழுத் தாளன் இளந்திரையனை!!


இந்த மதுமலரில் இருந்து..
ஒரு குவளை போதுமென..
நினைத்துத்தான்.
பருக முற்பட்டாய்..
ஊற்று..
ஊற்றென...
இன்னும் சுவைத்துக்கொண்டிருக்கிறாயே
இதுதான் மதுவின் குணம் ..மணிரெத்தினமே..!!

பூங்கோதை செல்வன் இப்படத்துக்கு
கவிதை எழுதும்படி.. அன்பு மையிட்டிருந்தார்
அதை நான் ஒற்றியெடுத்து..இந்த ஓரத்தில்
ஒட்டி வைத்திருக்கிறேன்... எம் தமிழால்.. நன்றி கோதை
=====================================================
ஆயர்பாடியில் பிறந்தவனே..
ஆயிழையுள் வந்தவனே..
தொட்டிலாய் ஆடியே..
விட்டிலாய் விழுந்து..
தினம் தினம் செத்துத் தொலைகிறேன்..
தேடியோடி..பொன்னி இன் செல்வனே..!

அத்தனை கண்களையும்
மறைத்து விட்டு குழலிலே இருந்து..
துளையிலே வழிந்தொழுகும் அன்பு..
துவாரத்தைத் திறக்குமா..கோதையின்..!கோபாலனே.!

இந்த இடைச் சங்கத்தை தடைசெய்து
பால்கடல் சூழ்ந்து விழுங்கிவிட...
இசையெனக் கடைந்து..
கடை எனப் பிடித்துக் கண்டுகொள்ள
கை விரித்துத் தடவுகிறேன்..
குமரிக் கண்டத்தில் இருந்து..
காணாமல் போன துவாரகை கோமானை!

ஈடுபாட்டை விட்டே....
அடைத்துவிட்ட மூங்கில் துளையே..
காதைக் கொடுத்துக் கேட்கின்றேன்..
காற்றுவரவில்லை..கண்ணனும் ஊதவில்லை..
உப்பிய எண்ணமாய்.. காயாம்பூவண்ணையே..
எண்ணியே..கசிகிறது கன்னமெல்லாம் கண்ணீர்!
கண்ணா..வா! கைபிடித்தே இதழ்பதித்தே குழல்ஊத..!!


பெட்டிக்குள்ளே அள்ளி..
காற்று வளம் பார்த்து
தூற்றி விடுகிறேன்
சின்னச் சின்னக் கவிதைகளாக..
அவனின் தேவதைநான்..
குட்டி விதையொன்றுவந்து விழாதா ..
என்ற ஏக்கத்தில்...

உன் கமண்டலத்தில் இருந்து
குண்டலத்தைக் கழட்டி வீசிவிடு
பூரணைக்குள்..
நான் உன்னைதான் நேசிக்கிறேன் என..
இல்லையேல்..
அந்திபடும் முன்...
தீ..
குளித்தலாகாது ..
இன்று..
பெளர்ணமி..!


என் தேசம்
இனம்
உறவு
தோழி..
பிரமன் படைத்து
பிடித்து
தள்ளி
பிழைத்துக்கோ என விட்ட நாளாம் இவளுக்கு இன்று!

தமிழை,புவனத்தை காணும் முன்..
தென்றல் கண்ட முழுநிலவிவள்!

வலைத்தளம் இருந்த ஓர்நாளில்..
வலையில்மாட்டி..கலையும் சேர்ந்தே..

மாமன் கொடுத்தான் என்னிடம் நிலாவட்டத்தை
நானும்..
பார்த்துப் பிடித்து..
படித்தும் வைத்திருக்கிறேன் விட்டம் குறையாமல்
கை பிடித்துக் கொண்டு...
ஒரு கணையாழி போடும்வரை..!

கூட்டைவிட்டு பறந்து வந்த
பனிப் பறவையிவள்
நானும்....
சிறகொன்றைக் கொடுத்தேன்
கூடிப் பறக்க..

கட்டுக்கடங்கா கவிதைக்காரி
காணத்துடிக்கும் இதயக்காரி
கொண்டையில்லாச் சேவல் இவள்
கொக்கரிக்கத் தெரியாக் கோழிக்குஞ்சு
ஊர்விட்டு ஊர்வந்தாள் தனிச்சி
எதிர்த்துப் பேசத்தெரியா ஊமைச்சி
எழுத்திலே அடிகொடுக்கும் தமிழிச்சி
ஓசைகேட்டால் உள்ளிழுக்கும் ஆமைச்சி
புலிகளை உறவாய் கொண்ட வேடுவிச்சி
புனிதமாய் இன்னும் வாழும் மானச்சி...

பழிக்குப் பயந்த பல்லிவால்
அடித்துப் பேசத்தெரியா வக்கில் இவள்
வாயாடியென வாங்கமாட்டாள் பெயரிவள்
இவளுக்கு வாதாட நான் இருப்பதால்தான் என்னமோ..

நான் ஒரு புத்தி சொல்வேன் கேள்!!
குணத்தைக் கொடுத்து பலத்தை வாங்கு..
புத்தியாய் இரு! கத்திபோல் நா வைத்து!
பள்ளம் பார்த்து நட..
உள்ளம் அறிந்து சேர்..
கலக்கமாய் இருக்கும் நேரத்தில்
கலங்கரை விளக்காய் நான் இருப்பேன்
ஊர் கூடி...
உன் உறவுகூடி...
உலகம்கூடி...
முகநூல்கூடி..
வாழ்த்தட்டும் இந்த “குழந்தைநிலாவை”
மிக,,மிக உயரத்தில் வைத்தே... —  with குழந்தைநிலா ஹேமா