Wednesday 26 November 2014


என் தேசம்
இனம்
உறவு
தோழி..
பிரமன் படைத்து
பிடித்து
தள்ளி
பிழைத்துக்கோ என விட்ட நாளாம் இவளுக்கு இன்று!

தமிழை,புவனத்தை காணும் முன்..
தென்றல் கண்ட முழுநிலவிவள்!

வலைத்தளம் இருந்த ஓர்நாளில்..
வலையில்மாட்டி..கலையும் சேர்ந்தே..

மாமன் கொடுத்தான் என்னிடம் நிலாவட்டத்தை
நானும்..
பார்த்துப் பிடித்து..
படித்தும் வைத்திருக்கிறேன் விட்டம் குறையாமல்
கை பிடித்துக் கொண்டு...
ஒரு கணையாழி போடும்வரை..!

கூட்டைவிட்டு பறந்து வந்த
பனிப் பறவையிவள்
நானும்....
சிறகொன்றைக் கொடுத்தேன்
கூடிப் பறக்க..

கட்டுக்கடங்கா கவிதைக்காரி
காணத்துடிக்கும் இதயக்காரி
கொண்டையில்லாச் சேவல் இவள்
கொக்கரிக்கத் தெரியாக் கோழிக்குஞ்சு
ஊர்விட்டு ஊர்வந்தாள் தனிச்சி
எதிர்த்துப் பேசத்தெரியா ஊமைச்சி
எழுத்திலே அடிகொடுக்கும் தமிழிச்சி
ஓசைகேட்டால் உள்ளிழுக்கும் ஆமைச்சி
புலிகளை உறவாய் கொண்ட வேடுவிச்சி
புனிதமாய் இன்னும் வாழும் மானச்சி...

பழிக்குப் பயந்த பல்லிவால்
அடித்துப் பேசத்தெரியா வக்கில் இவள்
வாயாடியென வாங்கமாட்டாள் பெயரிவள்
இவளுக்கு வாதாட நான் இருப்பதால்தான் என்னமோ..

நான் ஒரு புத்தி சொல்வேன் கேள்!!
குணத்தைக் கொடுத்து பலத்தை வாங்கு..
புத்தியாய் இரு! கத்திபோல் நா வைத்து!
பள்ளம் பார்த்து நட..
உள்ளம் அறிந்து சேர்..
கலக்கமாய் இருக்கும் நேரத்தில்
கலங்கரை விளக்காய் நான் இருப்பேன்
ஊர் கூடி...
உன் உறவுகூடி...
உலகம்கூடி...
முகநூல்கூடி..
வாழ்த்தட்டும் இந்த “குழந்தைநிலாவை”
மிக,,மிக உயரத்தில் வைத்தே... —  with குழந்தைநிலா ஹேமா

No comments:

Post a Comment