Wednesday, 26 November 2014

பொட்டின் தொடர்ச்சி


பண்பாடு இழந்து,பாரம்பரியம்போய்.அடையாளம் தெரியாமல்..
அழகிழந்து முகமும்,தாய்வழி,மொழி தெரியாமலும்...
இஷ்ரத்துடன் இட்டுகொள் பொட்டாக...அது ஒட்டுப்பொட்டோ.. சாந்துபொட்டோ,குங்கும்மோ,சந்தனமோ..எதுவாக இருந்தாலும்..பொட்டாக இட்டுவிடு பட்டென நெற்றியிலே...
கண்பேசுவது மெளனமொழி, வாய்பேசுவது ஒலியெழுப்பி, நெற்றிப்பொட்டு பேசுவதோ..காந்தமொழி .. நோக்கிவரும்..அத்தனை தீய பார்வை,எண்ணங்களை அது உள்வாங்கி ஒட்டிக்கொள்கிறது உடலில் பரவாமல்..
நான்.. மிகவும் மதிப்பவள் இந்த கிடைத்தற்கரிய சின்னத்தை .
வீட்டில் இருக்கும்போது இல்லையென்றாலும்..படியிறங்கும்போது.. 10நிமிடம்தான் என..பக்கத்துச் சந்தைக்கு போகும்போதுகூட..நெற்றியில் ஒட்டிவிடுவேன்..ஏன்.. அதிகாலையில்..ஓட்டப்பயிற்ச்சிக்கு கூட..பொட்டிடாமல் நான் போவதில்லை. ஏனோ..அதை இட்டுப் போகும்போது ஒருவித உணர்வு நான் இந்த இனம்தான்! என்ற திமிருடனான அழகு வருகிறது. மற்றவர்களிடமிருந்து என் தாய்மொழியை அறிவுறுத்துகிறது.
பொட்டில்லாமல் நான் சிலரைப் பார்க்கும்போது.. சொல்லிவிடத் தோன்றும் ..{தமிழர்களை} என் ஆசையை அடக்கிக் கொள்வேன் அது அவர்களின் விருப்பமென..
நான்....பாவாடை,சட்டையோ,ரீசேட்டோ போடும்போது {ஒருவித அளவு}
ஜீன்ஸ்,பாண்ட் போடும்போதுகூட..{மிகச் சிறிய வடிவமுடன்..கறுப்போ,சிவப்போ..}
புடவை,சுடிதார் அணியும்போது அதற்கேற்ற வண்ணமாகவும் ,வடிவங்களிலும்
இட்டுவிடுவேன்..
பெண்களே..கண்களாய் மதியுங்கள் .. நம் பச்சைகுத்தலை!!
------------------------------------------------------------------------------------------------------------
இதன் மகிகை பற்றி...
=================

சுத்தமாகத் தயாரிந்த {கலப்படமின்றி} குங்குமத்தில் மின்கடத்தும் தன்மை அதிகரிக்கிறது. இதை நெற்றியில் இடும்போது அதன் நேர் பின்னே மூளையில் உள்ள சுரப்பியோடு தொடர்பு ஏற்படுகிறது .இதனால் தெய்வங்களுடன் தொடர்பு கொள்ளும் வழி எளிதில் கிடைக்கிறது.
நெற்றியில் பொட்டு வைப்பதால் கண்படுதல் அல்லது திருஸ்டி எனப்படும் எதிர்மறை எண்ண அலைத் தாக்குதல்களையும் தவிர்க்க முடியும். ஹிப்னட்டிசம் முதலிய மனோவசியங்கள் புரவ மத்தியில் பொட்டு வைத்தவரை பாதிக்காது.
---------------
நினைவாற்றலும்,சிந்திக்கும் திறனும் உரிய இடம் இதுவே {நெற்றிப்பொட்டு}
யோககலை இதனை ஆக்ஞாசக்கரம் எனக் குறிப்பிடுகிறது .இந்த இடத்தில் எலெக்ட்ரோ மேக்னடிக் என்ற மின்காந்த அலைகளைவெளியிடுவதால்தான்..
கவலைப்படும்போதோ, வாடும்போதோ, அழுத்தம் வரும்போதோ..தலைவலியை உணரலாம்.
நெற்றியில் இடும் குங்குமம் அந்தப் பகுதியைக் குளிரவைக்கிறது.
தீயசக்தி, தீய எண்ணங்களிலிருந்தும் காக்கின்றது..ஏனெனில் இறை அனுக்கிரகம் அதில் இருப்பதால்..

No comments:

Post a Comment