Thursday, 27 November 2014

உமைக்கு மகனாய்..
அழகன் அறிவழகனே..
ஒளிக்கு வாரிசாய்..
ஒளிரும் ஒளிவிளக்கே..
உலகாளப்போகும் உத்தமராசாவே..
நவமணியே...
நல்விதையே..
நறுமலரே..
நாவலனே...
உன்னால் பெற்றவரைப் போற்ற.. மற்றவர் வாழ்த்த..
மாநிலமும் அதிசயிக்க..மனிதம் உயிர்பிழைக்க
வாழடா கண்ணே..கண்மணியே..கல்கண்டே.
பொன்னுலகத்தின் புதுவரவே..
அகவை ஒன்றில் அடியெட்டுத்து வைத்து
தத்திவரும் தவப்புதல்வன் “தியாகேஷ்” யை
பெற்றவரும்...
பெறாமகனை தென்றலும்....திங்களும்
நீங்களும்...
வாழ்த்துங்களேன்..
செல்லத்தை வாழ்வாங்கு வாழ்ளென்று!
====================================
{என் கைவண்ணத்தில் உருவான கேக்கிது
செல்லகுட்டிக்காக...
சுற்றிருக்கும் புல்லில் இருந்து..அத்தனையும் ஜசீங்..

4 comments:

  1. இனியதொரு கவிதை..

    தத்தி வரும் தங்கக் கொழுந்து தியாகேஷ்..
    நலமுடன் வாழ நல்வாழ்த்துக்கள்!..

    கைவண்ணமும் பச்சைப் பசேலென அழகு!..

    ReplyDelete
  2. இன்று வலைச்சரத்தில் தங்கள் தளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது..
    http://blogintamil.blogspot.com/2014/11/blog-post_28.html

    மேலும் புகழ் எய்திட நல்வாழ்த்துகள்!..

    ReplyDelete
  3. அன்புக்கு நன்றிங்க துரை செல்வராஜூ

    ReplyDelete
  4. அன்புக்கு நன்றிங்க துரை செல்வராஜூ

    ReplyDelete