கற்பும் நட்பும் நெருக்கப்பட்டுப்
புண்ணாகும் இக்காலங்களில்.- அவன்
ஒழுக்கத்தைச் சுமந்து பழக்கத்தில் வந்த
பழுதுபடாப் பார்வையினால்...
பொழுதுபட்டாலும் உடன்போவேன் நம்பி
மெழுகாக இருந்தாலும்..ஒழுகாத அடக்கம்கண்டு
வழுவாத அவன்இயல்பைத் தொழுதுவணங்குத்
தோழா..!துணிகரமாய்த் தோள்சாய்வேன்
ஒவ்வாமையின்றி ஒருங்கிணைந்து
உண்டு களிக்கும் எம்நட்பால்...
அஜீரணமாகி அசிங்கம்வந்ததில்லை
பெண்குணம் நான்குடன் நானும் அடிவைக்க...
பொய்யாமொழியின் இரண்டடியினுள்..
நீயும் உள்போக- பகுத்த
ஆறுடன் நாம் அளந்துநடக்கும் சுவட்டில்
யாரும் ஆ...!சீ...,,”என்றும்” வாயால் உமிழ்ந்ததில்லை
அடுப்பாய் எரியும் ஆண்மைஅழகன்தான்!
பஞ்சாய்ப் பறந்தாலும்- பற்ற
அஞ்சி, அகம் தேடும் பிஞ்சுக் குழந்தையவன்
வஞ்சிக்கத் தெரியாத நெஞ்சுக்குத் தந்தை
சதிரத்தில் ஓடும் உதிரத்தால் பச்சைத்தமிழன்
இவனே..!
பங்கம் வராமல் பக்கம்வரும்- என்
இணைகோட்டுத் தோழன்.
No comments:
Post a Comment