Wednesday, 26 November 2014

பூங்கோதை செல்வன் இப்படத்துக்கு
கவிதை எழுதும்படி.. அன்பு மையிட்டிருந்தார்
அதை நான் ஒற்றியெடுத்து..இந்த ஓரத்தில்
ஒட்டி வைத்திருக்கிறேன்... எம் தமிழால்.. நன்றி கோதை
=====================================================
ஆயர்பாடியில் பிறந்தவனே..
ஆயிழையுள் வந்தவனே..
தொட்டிலாய் ஆடியே..
விட்டிலாய் விழுந்து..
தினம் தினம் செத்துத் தொலைகிறேன்..
தேடியோடி..பொன்னி இன் செல்வனே..!

அத்தனை கண்களையும்
மறைத்து விட்டு குழலிலே இருந்து..
துளையிலே வழிந்தொழுகும் அன்பு..
துவாரத்தைத் திறக்குமா..கோதையின்..!கோபாலனே.!

இந்த இடைச் சங்கத்தை தடைசெய்து
பால்கடல் சூழ்ந்து விழுங்கிவிட...
இசையெனக் கடைந்து..
கடை எனப் பிடித்துக் கண்டுகொள்ள
கை விரித்துத் தடவுகிறேன்..
குமரிக் கண்டத்தில் இருந்து..
காணாமல் போன துவாரகை கோமானை!

ஈடுபாட்டை விட்டே....
அடைத்துவிட்ட மூங்கில் துளையே..
காதைக் கொடுத்துக் கேட்கின்றேன்..
காற்றுவரவில்லை..கண்ணனும் ஊதவில்லை..
உப்பிய எண்ணமாய்.. காயாம்பூவண்ணையே..
எண்ணியே..கசிகிறது கன்னமெல்லாம் கண்ணீர்!
கண்ணா..வா! கைபிடித்தே இதழ்பதித்தே குழல்ஊத..!!

No comments:

Post a Comment