நாணிச் சொல்லும் பார்வை
நாவைக் கடிக்குமழகு
குனிந்து பேசும் மொழி
கூசி நிற்கும் வெட்கம்
சொக்க வைக்கும் சுந்தரம்
சேரச்சொல்லும் நளினம்
உறிஞ்சச் சொல்லும் மது
ஊறத்துண்டும் அது...
மாறச் செய்யா மனம்
இளகிக் கரையும் வெல்லம்
இனிக்கச் சொல்லும் உள்ளம்
தவிக்கவைக்கும் ஆற்றல்
தாய்மடி கொடுக்கும் அன்பு
தலைதடவும் பிரியம்
சாய்த்துக் கொள்ளும் காதல்
கலங்கி விடும் கண்ணீர்
தூக்கத் துடிக்கும் பாசம்
தூண்டி நிற்கும் நேசம்
மானே,மயிலே..
தேனே..குயிலே..
நிலவே ..ஒளியே..
மலரே..மணமே..
மரகதமே..மாணிக்கமே
கண்ணே..மணியே..
செண்டே..கல்கண்டே.
இன்னும்..இன்னும்..
இப்படி..இப்படிதான் அவர்கள்
இவைகள் அனைத்தையுமே..
பெண்களுக்காக .தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு
உவமையின்றி உண்மையாக..
மெய்யுணர்வை அடக்கி..மடக்கி வாழ்கிறார்கள் ஆண்கள்
ஆண் இப்படி இருக்கக்கூடாதென்ற மடத்தனக் கொள்கையால்..!!
No comments:
Post a Comment