Tuesday 9 December 2014


கல்லுக்குள்ளும் ஈரமெனக்
காட்டிவிட்டேன்
கடமைக்கு உடமையாக்காதே...
“மாலைக்கு மட்டும் கட்டாதே”
மலைக்கும் அழகை மழிக்காதே..
கொழிக்கும் உணர்வைக்
கொல்லாதே...
கோலியள்ளிக் கசக்காதே...
கோயிலில் கண்டால்
கும்மியடிக்காதே..
சாலையில் பார்த்தால்
சரசமாடாதே...
சந்திக்க நேர்ந்தால் சிந்திக்க
மறக்காதே..
“கல்” கற்றபின் காட்டு...
பூக்களெல்லாம்
பூஜிக்கதானென...
கூசிப் போகுது கூஜாக்குள்
இருந்தாலும்...
மாசுபடுகுது பங்கு நீயெனச்
சொல்லும்போது...
“நீர்”கண்டால் படிந்தடியில்
படரும் பாசிப்பூவல்ல..
வாசித்து எட்ட வைக்கும்
நூலுமல்ல..
நேசித்து சுவாசித்து மலர்தண்டாய்
இரு யோசித்து

No comments:

Post a Comment