Friday 12 December 2014

அதோபார்...
அங்கே..
அந்தக் குழைக்குள்
ஒளிந்திருக்கே ஒன்னாவதாக,
ம்ம்ம்ம்ம்ம்...
அப்புறம்
ந்தா.....
அந்த கொத்துக்குள்
நாலாவதாக...
அதே..அதே அந்த
கொப்பில்..
மூனாவதாக..
எல்லாம் சேர்த்து
எண்ணிக்கையில்..
பறித்து கொடடா....
இரு,இரு..
தவறிவிழுந்தால்
கோலம்கெட்டுவிடும்
பிடித்து,
உசுப்பிக் கொடு..
காணிக்கையாய்..
நான்
சேமித்துப் பழுக்க
வைப்பேன் சுவையாக.

No comments:

Post a Comment