Saturday, 6 December 2014


வானம்
ஊற்றிக்கொண்டிரு
க்கிறது என்மேல்
கிளையின் இலைக்குள் மறைந்திருந்தாலு
ம்..
நனைய...நனைய..
நனைந்து..நனைந்து...
என் குரலைமட்டும் நனையாது..
குழைந்து..வளைந்து குதூகலமாய்..
நைந்துபோன நாளுக்கும்
எங்கோ ஒருவள்
நேசித்துகொண்டிருப்பாள்
சுவாசத்தைவிட்டே..
அவளுக்குமாய்...
அள்ளியள்ளி இன்னிசையாய்
கொடுக்கிறேன்
என்னலையென்று திசையை நோக்காதே..
சிற்றலை சங்கீதத்தை
எந்த அலைவரிசையில் சேர்ப்பாய்
உடையாத ஸ்வரத்தால்..
குலையாத சுருதியால்..
குழம்பாத அழகுடன்..
ஆசானின்றி,
தாளமின்றி நான் இசைப்பதை!
மாங்குயிலே...
பூங்குயிலே..
கவிகுயிலே...
தேன்குயிலே..
சின்னக்குயிலே..
.என்றெல்லாம் வேண்டாம்
என்னகொடுக்கப்போ
கிறாய்..சொல்!
சொல்!!
இன்னலை பின்னலுக்குள் வைத்து
மென்னலையாய் பாடும்
இந்த ஆண்குயிலுக்கு..

No comments:

Post a Comment