Thursday 11 December 2014


கலைக்கண்,கவியரசன்(ஓவிய
{ன்}ம் : இத்ரீஸ் யாகூப் )
==============================
===========
உன்னையுண்டு இப்படியானேன்
என்னகொண்டு கழுவப்போகிறாய்?
கடைந்துண்ட காரணத்தால்
கருநீலம் ஆங்காங்கே
திருநீலகண்டா!
திரும்பித்தான்
நிறத்தை பாரேன்
தனித்திருக்கிறேன்
கடலைக் குடித்திருக்கிற
ேன்
விட்டுப் போட்டுப்
போகாதே
அலையைப் பிரிக்க
முடியாதே!
பட்டுப்போல் இருக்கிறது
நீ தொட்டுப் போர்த்திய
போர்வையிது
சொட்டுநீலம்
போட்டாயே சுரந்திருக்கு உடலெங்கும்
தொட்டுப்
பார்த்து தூவியணைக்க
சொந்தகரமே வாராயோ!
வானகம் கொடுத்துப்
போனாயே
வையகமென வாராயோ..
தேனகம்
இங்கே காத்திருக்கு
நீ தெளித்துச் சென்ற
வண்ணத்துடன்
ஒளித்து வைக்க
முடியவில்லை
காட்டிக்
கொடுக்குது கலையழகு
கலையைப் பிரிந்தால்
அழகேது
கந்தருவம் காண வாராய்!!

No comments:

Post a Comment