Monday, 8 December 2014

பொழிந்து கொண்டிருந்தது குளிர்ச்சியாக..
.
பொதுசனங்களிடம் பூமழை
எழுச்சியில் கொஞ்சம் எடுத்து
தனக்கென சேமித்தது
ஓர் சிறு தேக்கத்தை சின்னவளை
இதுகண்டு..
கிளர்ச்சி செய்யவே..
அதிலொன்று பாய்ந்து வந்து விழுந்தது
அதன்
இஷ்ரத்துக்கு குதித்து விளையாடி..
அல்லி தாமரையென ..
அடிதுலாவி கிள்ளி விளையாட
இது குளமல்ல என்று தெரியாத
மூடத்தவளை
தேக்கம் வற்றினால்..
தேகத்துடன் சேர்ந்து
உயிர்மானம் அல்லவா போகும்
இசையென...
இடைஞ்சலாய்..
மாக்,மாக்,மாக்கென கத்தியே
சுற்றுவட்டாரத்தை கொல்கிறது
நாணயமற்ற சங்கீதத் தால்
தன் வாயாலே தான் கெடும்
என்பது இதுதானோ..

No comments:

Post a Comment