செல்லகுட்டி புவனாவின் வேண்டுதலுக்காக
நானே செய்த சுஜிகேக்{ரவாகேக்}
ம்ம்ம்ம்ம்கும் இப்ப யாரும் தொடக்கூடாது
படிச்சு பாத்துவிட்டுதேன்...
------------------------
அதாவது...
காலையில் ஒரு குறுஞ்செய்நி வந்ததென்று சொன்னேன்
அல்லவா..
சரி..இதன் பின்னாடிப் போவோம்...
என் தந்தைவழியில் திருமணம் இந்தியாவில்
அதற்காக முதல்முதல் எங்களின்
தந்தைவழி வம்சாவளிகளை சந்திக்க எங்கள் குடுப்பத்தார்,ந
ான் உட்பட சென்றிருந்தோம் ஒரு திருமணத்துக்காக
..15நாட்கள்{தை,மாசிமாதம் சென்றிருந்தேன் அல்லவா}
திருமணத்தில் என் அத்தான் மிக்க மகிழ்வுடன்
அனைத்து உறவுகளிடமும்,நண்பர்களிடமும்..அ
றிமுகப்படுத்தும் படலம்தான்..அவர் கல்யாணத்தில்
கலந்து கொண்டதைவிட எங்களை அறிமுகப்படுத்து
வதில்தான் முழுமூச்சாய் இருந்தார் எனலாம்..
அடுத்து என்னைத் தனியாக அழைத்தார் வாடா என்னுடன்!
ஒருவரை அறிமுகப்படுத்துகிறேன் என்று.. நானும்
தட்டமுடியாமல் பின் தொடர்ந்தேன் அவ்வளவுகூட்டத்தையும்
கடந்து..
ஒரு பெயரைசொல்லி இவர் சிங்கபூரர் எனக்கு தெரிந்த
நண்பர் திருமணத்துக்காக வந்தார்
என..இப்படி பலமுக..அறிமுகம்..
{ஆள் நல்ல தோல்நிறம்தான் உலகம் சுற்றும் வலிபராம்
{வியாபாரம்}
கொஞ்சம் உயரம் கம்மிதான்..அழகன் எனலாம் வெளியில்...
எடுத்தவுடன் எனது கைபேசி இலக்கம் கேட்டார் நான்
நெளிந்துகொண்டே இருந்தேனா..என் அத்தமவன்
{வெளுத்ததெல்லாம் பால் என நினைப்பவர் }
கொடுடா..அப்படியென்றாரே ...அப்புறம் அழகல்ல என
கொடுத்துவிட்டேன்..
அங்கனயே ..சுத்தி,சுத்தி வந்தாக.. இருந்தாலும் நான்
கண்டுகொள்ளவில்லை..
இது கல்யாணத்தன்றே மட்டும்!
நாங்களும் சுற்றிப் பார்த்து, இலங்கை போய்,பின்
இங்கு வந்து ஒரு இருவாரம்
கழித்து ஒரு அழைப்பு வந்தது நான்
கலோ சொன்னால்..கல்யாணம்
முடிந்து வந்து சேந்தாச்சா என்றாக..ஒருகணம்
மூச்சே நின்றது யாருடா இது சம்பந்தமே இல்லாத
பேச்செல்லாமென...
யாருபேசுறீக என்ன வேணும் என்றால்..அட
மறந்துபோச்சா..கோயம்புத்தூரில்
பார்த்தோமே என்றாகளே பாக்கலாம்..
ஓஓஓஓஓ......அந்த அழகனா என மனதுக்குள் கருவிகொண்டு..ம்
ம்ம் வந்துவிட்டேன் எனச்சொல்லி அறுவையை குறைக்க
வேலை பேசமுடியாதென கூறி வைத்துவிட்டேன்.
அதன்பின்....
ஹாய்.ஹாய்,ஹாய்தான்....சாப்பிட்டீகளா..தூங்குறீ
களா..பேசலாமா..காலைவணக்கம்,தொட்
டு மாலைவணக்கம்வரை...{என்மேல நிஜ அன்பு காட்டுறவக
கூட இம்புட்டு அக்கரைப் பட்டிருப்பாகளா என
தெரியாதுங்கோ..} ஒரு 4,5
நாட்களுக்கு தொல்லையில்லையென்றிருந்தால்..அட
ுதநாள் நான் அந்தநாடு போனேன்..அதனால்
முடியவில்லை பிஸி..இப்படி குறுஞ்செய்தி..
நான் எதுவுக்குமே பதில் கொடுத்ததில்லை....
இன்று காலையில்..அந்த குறுஞ்செய்தி
எனக்கு எப்படி இருக்கும்..
உடனே அழைத்தேன் ..ம்ம்மகும் எடுக்கவில்லை..தொடர்ந்தும்
அழைத்தேன்..இல்லவே இல்லை..{அவரின் அதிஷ்ரம்! என் வாய்
கக்கும் நெருப்பில் இருந்து தப்பியது}
உடனே எடுத்தேன் ஒரு முடிவு வெட்டிவிட்டேன்
வாலை இப்போ..ம்ம்கும் ...நடக்காது ஜம்பம்
இனி எப்படி ......வேறு சிம்போட்டு அவர்
தொடர்பு கொள்ளட்டுமெனக் காத்திருக்கிறேன்..
அடுத்த கட்ட நடவடிக்கைக்கு.. அவரைக்கூட..வெட்டலாம்..
என் ஆசை,அருமை அத்தானுக்கும்
ஒரு எச்சரிக்கை விடுப்புடன்...இனிமேல்..
பாவம் என் அத்தான் சிலையாக இருந்ததை மனக்கண்ணால்
பார்த்தேன்.
இப்படிப் பலர் உண்டு பிடிக்காத
ஒரு செயலை செய்துகொண்டே...
இது முகநூலுக்கும் பொருந்தும் நான்
பலரை தொல்லையால்{டேக்,இன்பெக்ஸ்,கொச்சையாய்
கருத்து இப்படிப் பலரை நீக்கம் செய்துவிட்டேன்}
ஏன்..ஏன்..ஏன்..இப்படி அநாகரீகமாக நடந்துகிறாக...
கொஞ்சம் சிரித்துப் பேசினால்..உடலை சீர்குலைக்க
வருவாக என்ற நினைப்பா..? இல்லை வளைத்துவிடலாம்
என்ற திமிரா..?
அன்பைதானே கொடுக்கிறோம் ஏன்
அதை அசிங்கபடுத்துகிறாக...
ஒரு பெண் இந்த உறவுடன்தான் நடந்துகொள்ள வேண்டுமா..?
ஒரு ஆணுடன் நல்லமுறையில்
நெருங்கவே முடியாதா..?
ஹப்பாடா..என் கையடக்க
தொலைபேசி இப்போ மகிழ்ச்சி கொண்டாட்டத்தில்
அதற்குத்தான் இந்த கேக்..
இப்போ எடுத்துக்கோங்க...
Sunday, 7 December 2014
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment