Saturday, 6 December 2014


இருள்
கொடுத்தவனுக்கு
ஒளியாக..
குற்றம் செய்தவனுக்கு
துணையாக..
குருடாக்கியவனுக்கே
ஜோதிகொடுத்து..
கோயிலில்
பாவை விளக்காய்
தன்
உயிரை எரித்து கரியாக்குகிறதே.
.
சுட்டவனையே
சுகப்படுத்துவதுதான்
சுடரென தெரிந்துகொள்!
காலனே!கடவுளே!
என்ன விமோசனம்
கொடுக்கப் போகிறாய்..
இந்த வெண்திரிக்கு!!

No comments:

Post a Comment