Rமாக..}
{1}
பட்டாம்பூச்சி இவனென்று
ஏன்..பயந்து..
உன் மனதைக்
கல்லாக்குகிறாய்..
நான் உண்ணும்
ஒருமொழி தேன்மொழி
அது நீதான் பெண்ணே
உன்னை எப்போதும்..
கட்டியிழுப்பவனும் ...
தட்டிக்கொடுப்பவ
னும்..நான் மட்டுந்தான்
கலங்காதே கண்ணமா..
நான் பாவேந்தன்
பா ரதி தாசன்தானடி...
==============================
==
{2}
கட்டியவன்
காலமாகிவிட்டான் என்றா
கல்லாகிக் கிடக்கிறாய்..
நான் உன் காவல்தெய்வம்
என் எல்லைக்குள் வைத்தே..
கொள்ளையடிக்கப்
போகிறேன்..
உன்னையும் உன்
எதிர்காலத்தையும்!!
==============================
=======
{3}
கண்ணாம்பூச்சி என்றுதானே நினைக்கிறாய்..
ம்ம்ம்ம்கும்...
நான் கழட்டிவிடமாட்டேன்
கருங்கல் என்றாலும்..
========================
{4}
என் கனிந்த இதயத்தை
உன்னிடம் கொடுத்து ...
நான் காதலித்தது நிஜம்!
நீதான் ..
உன்போக்கில் போய்..
என்னைக் கல்லாக்கிவிட்டா
யே..
இப்ப ஏன்.. கட்டியிழுக்கிறா
ய்..
விட்டு விடு...
ஒட்டாது உதடும்,உள்ளமும்,
உறவும் இனி..
நான் விட்டுவிட்டேன்..
காதலுக்கும் மானம்
உண்டல்லவா..
காத்திருக்கிறேன்
ஒரு கவரிமானுக்காக..
------------------------------ -----------
{5}
என்னைக் கட்டிக்
கல்லாக்கிவிட்டு..
கட்டியிழுத்துத்
திரிகிறானே..
பெயருக்கும்,பார
்வைக்கும்..
மனைவியென்று..
=====================
{6}
ஒருவள் செய்த தப்பால்..
இறுகிப்போன அவனிதயத்தை
அவளின் இனமான நானே..
நிவர்த்தி செய்து..
நிவாரணம் கொடுத்து..
ஆபரணமாய் என் இதயத்தைப்
பூட்டி..
தேர் இழுக்கிறேன்..தி
ருவிழாகாட்டி
திருப்பம் ஒன்று வந்துசேர
என்மேல் விருப்பமென..!
------------------------------
-----------------
{7}
வயதான காலத்தில் ..
ஒன்றுக்கும்
முடியவில்லையே என..
தாழ்வுமனப்பான்மையால்..
தாழ்வாரத்தில்தான்
இருந்தேன் கல்லென..
வந்தாள் சீதேவி ம{று}
ருமகளாய்..
இப்போ நான் சீமாட்டி..
ஒரு குழந்தையைப் போல் ..
போகுமிடமெல்லாம்..
எனையும் மடியேந்திப்
படிகாட்டி..
செல்கிறாள் என்
தாயவள்போல்
அவளின் இறக்கையால்
நானும் பறக்கிறேன்..
மூண்டதீ அணைந்து ..
மீண்டும் இளமையுடன்
முழுதாய் குணமடைந்து .
==============================
===============
{8}
இவளுக்கு வாழ்கைபட்டு..
என் இயல்பை மறந்தேனே..
அந்த
கயிறு கட்டிவிட்டோமே..
என்ற பாவத்துக்காக.. நான்
அடங்கினால்
அடக்குமுறை ஆட்சியை அல்லோ..அமுலில்
வைத்திருக்கிறாள்
அவள்முன்னே..நான
்பின்னே முரணாகவே எப்போதும்
ராட்ஷசி..
எப்போ..
புரிவாள்
பெண்மைக்கு நான்
கொடுக்கும்
மரியாதையை
எப்போ..
உணர்வாள்
ஆண்மையை மதித்து நடக்க..!
==============================
==============
{9}
இமயத்தில்தான்
வாழ்ந்துகொண்டிர
ுந்தேன்..
இடிபோல வந்த
எரிமலையால்..
தனித்து வீசியெறியப்பட்ட
ேன் எங்கோ..
இடர்பட்டு..
உருண்டு...
வாழ்வு சிதைந்து
வரண்டுகிடந்தேன்..
வள்ளலொருவன் வழியில்
தென்படும்வரை..
வந்தவன்... வண்ணம்காட்டி
இந்தக் கல்லை...
கலைக்கூடத்துக்கு கவ்விச்
செல்கிறான்
அம்மி பொழிந்து..
என்னடி அதில்வைத்து
அருந்ததி காட்டவாம்... -----
Friday, 5 December 2014
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment