நீ வாழ்ந்துகொண்டிருந்தாய்..
உனதருமை தெரியவில்லை..வய
தில்லை
உனது பெருமை தெரிந்தே வாழ்கிறேன்
வீழ்ந்துவிட்டாய் வேறோர் உலகத்தில்
உனைக் கட்டமுடியாத காலம்
சுட்டெரித்தே..
உடன்கட்டி வாழ்கிறேன் உன்பாவை
அங்கங்கு பட்டு ..அங்கங்கள்
தொட்டு..
உருண்டோடும் பாட்டு நீ இட்ட
கூட்டு..
கட்டுண்டே..நானும் கவியெழுதக்
கற்றேன்
நான் பேசநினைப்பதெல்லாம்....
வாழநினைத்தால்...வாழலாம்..
தங்கபதக்கத்தின்மேலே..ஒருமுத்துப்
பதித்ததுபோலே..
விட்டதை நிரப்பி..விடியல
ை நோக்கி..
மீண்டும் பிறந்து வாநீ..நான்
இறந்து பிறக்கின்றேன்
கண்ணதாசனே..! காதலனே..! எனக்குள்
வந்துவிடு
கட்டிப்பிடி என்
கையைப்பிடி சேர்ந்தே பாட்டெழுத..
காலமாகிப் போனாலென்ன..பொல்
லாதகாலம்
ஆகிக் கிடக்குதே காலம் தற்காலம்..!
அது நம்பொற்காலம்!!
Friday, 5 December 2014
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment