Friday, 5 December 2014

{ இக் கவிதை இரண்டும் ஹேமாவின்
பக்கமிருந்து எடுத்த படத்துக்காக..மட
்டுமே எழுதியவரிகள் நன்றி ஹேம்ஸ் }
1-
உன்னில் இருக்கும் வண்ணத்தைக்
காட்டித்தானே..
வடிவுகளை ஆய்ந்தாய்..
இப்போ...
நரம்புகள்போல் எண்ணம்
வந்து நசுக்குகிறதா..
நாடி....
அடங்கி..
இருந்துவிட்டாயா..
அன்று நீ பறந்தாய்..
இன்று சிறகுர்த்திச் சந்திக்கின்றாய்..
சிந்திக்காமல் அன்று செய்த பிழை
ஒருநாளும் திரும்பப்போவதில்லை
நீ திருந்தி வருந்தினாலும் செய்த தவறு .
==============================
======
2-
சேலத்து மாம்பழமே..
திண்டுகல் பலாப்பழமே..
மதுரை மல்லியே..
நெருநெல்வேலி அல்வாவே எனக்
கலந்து மணத்திருந்த
ஒட்டுமாங்கனியை..
உருத்தாக்க எண்ணியிருக்கையில்..
கருத்தாக்கத்தால்..
ஒட்டைக்கழட்டி..
ஓட்டைபோட்டு..
முன்னால் ஒழுகிய வண்ணங்களை
பிணமென மெய்மேல் பூசிவிட்டு...
பறத்தலை நிறுத்தி..
பார்வையைப் பிடுங்கி...
மொழியை முறித்து...
மூலையில் இப்படி இருத்திப் போனாளே...
சுடரொளியை நான்பிடித்த தோஷத்தாலே..
முழுதாய் உயிரைக்குடித்த
என்கிழத்தியால்..
சுருண்டு கிடக்கின்றேன்
இருண்டகண்டத்தில்!!

No comments:

Post a Comment