Friday, 5 December 2014


பொதிகையிலே அகதீயென
பொருந்தச் செய்தாய்
குமரியிலே கண்டமென
மறைந்துவிட்டாய்
உடலுள்
ஆன்மாவை ஒட்டிவிட்டு
படலையிலே பாம்பாகி படுத்திருந்தால்
நஞ்சு ஆகி கொஞ்சம்
தஞ்சம்தேடி கொல்கிறதே வஞ்சியை
சுடுகிறது காதல்!
சுனையே எங்கே நீ
அந்தணனே தவித்தருளும்
அந்திக்கு தந்தருளும்
காட்சியை
மெய்வார்த்தையித
ு ஒப்புக்கு தான் அல்ல
ஒப்பந்தம் இங்கே உனக்காகக்
காத்திருக்கு
ஓர்பந்தம் தூக்கி ஓடிவா!
ஓர்துளி மையுடன்
கையெழுத்திட.

No comments:

Post a Comment