Friday, 19 December 2014


இந்த குடிசையில்தான்
வாழ ஆசைப்பட்டேன்
மாளிகை மண்ணளையக்
கூடாதென..
மதில் சுவர் எழுப்பியது
மாளிகையின்
மல்லிகை மணமாகாமல்..
குடிலின் வாயில்
பூட்டியே கிடக்கிறது
யாரும் திறக்க
முற்படாதீர்கள்
நாற்றம் வரும்..
ஏழை,எளியவனென...
“என் கண் கலங்கும்”
இருவர் உள்ளமும்
பள்ளமின்றி..
இங்குதான்
வாழ்ந்துகொண்டிர
ுக்கிறது
இன்னும்...மையலுடன்.


உயிரின்றி வெளிறிருந்தேன்.
ஏக்கமுடன் பார்த்தான்
எட்டிப் பிடித்தான்..
இதயத்தை கொடுத்தான்
நெற்றி..
கழுத்து..
கை..
கால்விரலென..மங்
களமாய்....
அந்த
இடத்தை கொடுத்து உயர்ந்தான்
மனிதம் என்ற
செங்குருதி ஓடும்
இனியவன


சே.....
என்ன ஆணும்,பெண்ணும்
சமயம் பார்த்து
சந்தடி இல்லா இடம்பார்த்து
சத்தமில்லாமல்...
சங்கடப்பட்டு ..
கொடுப்பதுதானே..
முத்தம்.
நம் மரபும்..
சங்கோசமில்லாமல்...
சங்கீர்த்தனம்பாடி..
சரசமாகக் கொடுக்கிறார்களே...
சங்காத்தமே வேண்டாம்..
சீ....போ...போ...

Wednesday, 17 December 2014

இவகதான் அந்தச்
செல்லக்குட்டி...
{ஏவா} நான் பார்க்கும்
போதெல்லாம் சொல்லும்
வார்த்தைதான்
அது அதை திருப்பி என்னைப்
பார்க்கும் போதெல்லாம்
சொல்லுறாக ஹாய்
சுவீட்டி ஐ லவ்
யூ என......16யே மாதங்கள்தான்!!
எதை நாம் பேசினாலும்
அழகாகப்
பேசுகிறா..கலாம்
மா நைஸ் மமம்
என்பாக..அவ்வுக்காக
இப்போ என் நேரத்தில்
கொஞ்சம்
சமையலிலும்..சாப
்பிடும்போதெல்லாம்
தயூகலாம்மா என்பாக,,..சொல்ல
ி முடியவில்லாதது அவகளின்
கிளிமொழி . ..


அன் பால் பொங்கி
அகத்தால் நெருங்கி
"நான்" என்ற ஆணவம்விட்டு
அன்பை ஆவணத்தில்
அடைத்து
அனைவரும் நம்
குடும்பமென்றே...
வேற்றுமை பார்க்காமல்
முதல் தேதியில்
கையெழுத்திடுவோமா..
ஒற்றுமை,திறமை,ப
ெருமை,வளமை,புதுமை
அருமை,பெருமை என...
கருமை கூட்டாமல்..
ஆண்மை,பெண்மையென..
வேற்றுமை சேர்க்காமல்
ஒருமையாகவே..

Tuesday, 16 December 2014

உழுது
பண்படுத்தி
விதைத்து
பயிராக்கி
களையெடுத்து
காத்து
கதிர்ரெறிந்து வருமெனக்
காத்திருந்தால்...
எண்ணத்தைப் பதராக்கி
தாய்மண்ணைத் தட்டிக் கழித்து
களிபடாமல்..
கலியை மிதித்து
பறந்து ..பறந்து.
விஞ்ஞானத்தை வளர்க்க
விவசாயத்தைப் புதைத்து
விளையாடும் விபரீத வாலிப
ஆட்டத்தை
என்ன சொல்ல
பூமாதேவியே.......

பலவகை ஒப்பந்தங்கள்
இன்னும்...
பார்வையிடாமலும்..
கையெழுத்திடாமலும்..
உன் பேனாவைத் திறத்து
மை .....
இதனுடன்
இரண்டெழுத்தை கூட்டி
உறுதிப்படுத்தி இடேன