Thursday 12 March 2015

இசையும்..கதையும் {1}
========== =======
ஹாய் செல்லம்
சொல்லுடா வந்துவிட்டாயா , சரி உள்ளே வா !
ம்ம்ம்.. சரிடா சொல்லு..சொல்லு எங்கே போகலாம் இன்று. இன்றுனக்கு விடுமுறையல்லவா.. உன்னைய நான் ஒரு பிடிபிடிக்கனும் எல்லாச் செலவும் நீதான் என்றேன் அவனிடம்
சரி நானே சொல்லட்டுமா.. என முந்திகொண்டேன் முந்திரிக்கொட்டைபோல்! . பூங்காவுக்குப்போய் காற்றுவாங்கி, அப்புறம் சினிமாவுக்குப்போய் கதைவாங்கி, அப்புறம்,அப்புறம் கோயிலுக்குப்போய் தாலிகட்டி வருவோமா என்றேன் என் முறையான அத்தானிடம் முட்டிப் பார்க்க.
ஐய்யோடா..அவசரத்தைப் பாரேன் என் வருங்கால வாயாடிக்கு என்று.. ..எங்கே என்னத்தை அத்தை..அத்தேய்.... இங்க பாருங்க உங்களின் பொண்ணு தேவியை! என்னைய வில்லன் ஆக்கப் பார்கிறார் என்றான் என் அத்தான் தலையைநீட்டி என் அம்மாவின் அறையைநோக்கி..
அண்ணன் மகனல்லவா..பாசம் அம்புட்டுப்பாசம் , என் அத்தான்மேல்.. தம்பி அவளைப்பிடித்து ஒரு மூக்கணாங்கயிறிடு என்றால் தள்ளிப்போடுகிறாயே..இன்னும் சிலமாதங்கள் ஆகட்டுமென.. நான் என்னப்பா செய்ய என்று என் அம்மா நழுவிவிட்டார் புன்சிரிப்புடன்.
என்னத்தான் அத்தனையிலும் .. சுந்தரம்தான்!, அதையறிந்துதான் என்மாமா இட்டாரோ அவனுக்கு சுந்தரம் எனப் பெயர். தமிழென்றால் உயிர், தாயென்றால் இதயம், தந்தையென்றால் துடிப்பு ..நானென்றால் இவை மொத்தமும் சேர்ந்தே.. சேமித்திருந்தான் என்னை! களித்தான்,திளைத்தான் .. என்னத்தான் நாட்களை, அவனுடன் எனக்கும் போவது தெரியவில்லை பொழுது! எங்களின் காதல் மனிதக்காதல் அல்ல..
இப்படிவசந்தமாய் இருக்கும்போதுதான்..
வாழ்விழந்தது வசந்தம் ஓர்நாள்! என் அத்தான் விபத்தில் சிக்கி......
ஓ..ஓ..ஓ. நான் இறங்கும் இடமல்லவா..கடந்துவந்த நினைவிலிருந்து விடுபட்டு அவசர அவசரமாக..பேருந்தில் இருந்து இறங்குகிறேன்..
இறங்கி நடக்கின்றேன் என் அத்தையின் வீடுநோக்கி கதவைத்திறந்துவைத்து என் வரவுக்காகக் காத்திருக்கிறார் .. பெற்ற மகனால் சீர்குலைந்த என்னத்தை!
அத்தை.. கட்டியணைக்கிறேன்.. சாப்பிட்டீர்களா அத்தே ..மாமா எங்கே .. அத்தான் சாப்பிட்டிருக்காதே .. என என் அத்தானின் அறையை நோட்டமிட்டுத் திரும்பினேன் என் அத்தைய்யின் கண்களில் குருதி வடியக் காத்திருந்தது. அவரை திசைதிருப்ப
அத்தே..அத்தே..ஒரு சேதி தெரியுமா..உங்கண்ணா..அதுதான் என் அப்பா சாயங்காலம் வருகிறாராம் உங்களையும்,மருமகனையும் கண்ணில் ஒற்ற என்றேன்..
அந்தக் குருதிக் கண்ணிலும் ஒரு மின்னொளி பளிச்சிட்டது அப்போ.. அத்தனை பாசம் என்னப்பாமேல் அவருக்கு.
அத்தே .அப்புறம் நீங்க சமைக்கனும்தானே உங்க தம்பிக்கு அதனால..போய் ஓய்வெடுங்க நான் அத்தானைக் கவனிக்கிறேன் என..அத்தையை அவரின் அறையில் தள்ளிவிட்டு..மெதுவாக அத்தான் என்றேன் ..அபிராமிஈஈஈஈ ஓடிவந்து ஒட்டிகொண்டான். . சாப்பாட்டைக் கையில்லேந்தி அவனுக்கு ஊட்டிவிட எத்தனித்தேன்.. அதில் விருப்புக்காட்டிய உணர்வின்றி..என் கையைப்பிடித்துத் தூக்கி, சுடிதாரைத் தொட்டுப்பார்த்து, பொட்டைக் கிள்ளிப்பார்த்து முடியைத் தொட்டுப்பார்த்து குழந்தையென இருக்கிறான் என் அத்தான் சித்தம்கலங்கி..
மிகவும் கஷ்ரப்பட்டு அவனோடு அவனாகி .. உணவளித்தேன் என் உயிரான அத்தானுக்கு ! என்குறும்பு, என்கோபம், என்சிரிப்பு, நான்கொடுக்கும் கஷ்ர நஷ்ரம் இப்படிப் பலவும் தாங்கிய தாயுமானவனாச்சே ..
நான் இதுகூடச் செய்யவில்லையென்றால்...
ஒருகணம் என் தாயை நினைத்தேன் . என் அத்தானுக்கு இப்படி ஆகியதென அறிந்தவுடனேயே .. படுக்கையில் விழுந்துவிட்டார் பாரிசவாதமென .. அத்தனை பிரியம் அவன்மேலும் என்மேலும்..எங்களின் எதிர்காலத்தையெண்ணியே.. இப்படியாகிவிட்டதுபோலும்... என் தாய்க்கு!
என் சிந்தனையைக் கலந்தான் என் அத்தான். என் காதருகில் வந்து அபிராமீஈஈஈ என்றான் அந்தவிபத்துக்குப்பின் தேவியாகிகநான் அவனின் சித்தத்தில் அபிராமியாகிவிட்டேன்.
அத்தான் விளையாடலாம் வாங்கோ.. எங்கே தாள் ,பேனா, வண்ணமெல்லாம்.. எடுங்கோ.. கவிதையெழுதி,ஓவியம்வரைந்து என சொல்லி,, எடுத்தேன் அந்தப் பொருட்களை! அவன் நின்றிருந்தான் ஜடமாக. நான் என் அத்தான் எனக்கு வேண்டும் பழையபடியே... என்ற முயற்ச்சியுடன்..பயிற்சியுடனும்! என்னைத் தீட்டிக்கொண்டிருந்தேன். என்னை அணைந்தே உட்காந்தான் சிறு குழந்தைபோல்.. அவனுக்கு நான் தாயானேன் அப்போது .. என் கருவறைகூடக் கனக்கிறது அவனின் சிதைவையெண்ணி..
கண் நோவு,மனசு வலி, எண்ணம் அழுகை, இறைவா,,! என..இவைகளை என்னுள்ளடக்கி .. உள்ளத்தைக்காட்டுகின்றேன் அவனிடம் ஒளிவிளக்காக..
அவன் என் அத்தையின் குலவிளக்கல்லவா.. அவன் களைத்து என் மடியில் உறங்கிவிட்டான் மெதுவாய் தலையை இறக்கிவைத்து கட்டிலில் படுக்கவைத்து என் அன்பு அத்தானுக்கு ஆசையாய் முத்தமிட்டேன் நெற்றியிலே அத்தனை பாரத்தையும் இறக்க..! நான் அவனிடம்காட்டும் முத்திரைதான் இது தினமும்.. அறையைச் சாத்திவிட்டு .. படியிறங்கலாம்.. என் அன்னையைக் கவனிக்க வேண்டுமே

No comments:

Post a Comment