Wednesday, 26 November 2014

உனக்கு மட்டும்...
உனக்கு மட்டும்..
ரகசியம் சொல்வேன்
அந்த..
ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லிவிடாதேயென...
செம்மொழியுடைத்து..
செங்கரும்பூட்டி..
இழுத்துமூடி...
கணுக்கால் தெரியாமல் உடுத்தி
கையேந்த வா..வாவென..
கிராமியத்தி நிறுத்தி ..யாத்து
அணி..அணியாய் கோர்த்து
பொன்னூஞ்சல் கட்டி..
ஆடு..ஆடென உந்தித்தள்ளி
தெளிய.... தெளியத்தெளிய.. ..மயக்கம்
சொல் அச்சடிச்சி..
சொல்..சொல்லென அச்சுபதித்து..
பதிய..பதியவைத்து....
பதியம் வைத்திருக்கிறான் சிந்தாமணி நாள்ளிதழில்
ஒரு பக்கத்திலே.. ஒரு கவிஞன்..!!

ஒன்றாகி ...
என்னைத் தின்ற அழகிலே....
உண்டாகி...
இரண்டாகி...
ஈசன் கொடுத்த ஈர்மை இந்த ஈடு


அள்ளியணைத்து..
கட்டிப்பிடித்து..
முத்தம் கொடுத்து..
எழுதடா ஒரு கவிதை பாக்கலாம்...
எழுத்துக்குள் அடங்குமா ..இந்த அழகென..
தோற்றுப் போவாய்...
மை முடிந்துவிடும்..
பொய்வராது..
தாள் மட்டும் உன்னிடம்
தள்ளி நின்று தவிக்கும் மொழி
அப்புறம் ...
கவிதை புறப்படுமா..
கம்பி பிடி தான்..
பால்
இயல்
பலா
கா ரமென..
கூண்டுக்குள் அடைப்பேன்


கலோ..கலோ...சுகமா..
ஆமா..நீங்க நலமா..
நானே செய்த.. ....


பிறவியிலேயே..
ஊமையாம்...
இன்னும் ..
கன்னி கழியாமலே..

முட்டி..முட்டி..
நிரம்பி நிற்கிறதே..
அந்த மதகை கொஞ்சம் திறந்துவிடேன்
ஓடிவந்து சேரட்டும் மத்தியில்
மதாளித்து இருக்கிறது மனசு
மத்தியஸ்தம் செய்யவா..
மதிப்பளி..
மகுடம் சூட்டு..
நிறைத்துக் கொள் ஆசையை
பின் இறைத்துவிடு காதலாய்..
குனகுதல் செய்யவா
குதலையைக் கேட்க வா..
குதர்க்கம் வேண்டாம்..
குதரும் வேண்டவே..வேண்டாம்
குதுகுதுப்புடன் இருக்கின்றேன்
குந்தகமேது..?
குதித்துவா..குணஞ்ஞனே..! குணதிசைதேடி..!!


மூச்சை தின்று,தின்று..
திணையுடன்தானிருக்கேன்..
திருப்பள்ளியெழுச்சி பாடிப் பாடி
திரும்பித் துருவி பார்த்துப் பார்த்து..
பண்பாளன் ஒருசிறங்கை நீதான் என..
அள்ளிப்போடமாட்டானா என..

என்கொம்பை ஒடித்து எழுதியவனே...
உனக்கு சரித்திரம் நான்தான்
அதற்கு கொஞ்சம் உயிர்கொடுக்க..
உலா வா...
அண்ணாந்துபார்..
நிலாவை நோக்கு
விழியாள் செண்பகப்பூ விழி யாழுடன்..
உன் உளியென்ற கண்ணும் ஒளிகொண்டு மோத..
இடியுண்டே காதல் இளகிவிழ..
மடிகண்ட கன்றாய் முட்டிநான் இழுக்க
கொடிகண்ட போதையில் சுரந்து நீகொடுக்க..
துடிக்குதே..துடிக்குதே...
எண்ணித் துள்ளித் துடிக்குதே..
கொண்டாடி மகிழ.. கொண்டாடி பூமகிழ..
ஒருநடை வந்துதான் போயேன்..திண்ணையிலே..
தென்றல்வசிக்கும் தெரு எதுவெனக்கேட்டு !!