அமெரிக்காவில்..
பரபரப்பாம்..
வெள்ளைமாளிகை
இடம்பெயர்ந்து ..
இருண்டகண்டத்துக
்கு வந்ததால்..
Friday, 5 December 2014
Wednesday, 3 December 2014
முட்டிமோதி
தவறிவிழுந்து
சறுக்கிச் சரிந்து..
காயங்களைத் தேடிவிடாதே மாமோய்...
என் மெய் பதறிப்போகும்
உள்ளமும் உதறி உதறிக் கதறும்
பார்த்து நடடா...
பள்ளங்கள்
குழிகள்
கற்கள்
புதர்களென...
வழிகளில் கட்டாயம் இருக்கும் பூமலர்போல்
விழித்தே இரு..
கனிவாழைத் தோல்களில் உன்னடி படாமல்..
உன் கண்மணியில் கவனம்வைத்து
மடல்வாழை விரிந்திருக்கு மாமனே..
உன் காயத்துக்கு மருந்தாக...!!
Monday, 1 December 2014
போறாக..போறாக பொன்னுதுர போறாக.
கண்ணுக்குள்ள அப்பிகிட்டு காணாம போறாக.
இந்தபுள்ள பாவமெண்டு எப்பயாச்சும் நினைச்சதுண்டா
நீத்தறையெண்டா தள்ளிபுட்டு நான்போவேன்
நிமிந்திருக்கும் நெஞ்சறைய எப்படித்தான் தள்ளுவது..
நீண்டதொரட்டிக்காரா நெல்லிகா காச்சிருக்கு
நெல்லிவற்றல் ஆகுமுன்னே நிமிந்துதான் பாரேன்டா
நீர்முள்ளி செடியிது நிலையறிந்து வாயேன்டா
நீராவி புடிச்சதால நிமிந்துநிக்க முடியல்லையே
நீராகாரம் எண்ட நினைப்புடனே நான் இருக்கேன்
நீத்துபோகமுன்னே நீட்டிவிடு உன்கரத்த
நேசத்த கூட்டியல்லோ நெடுநாளா நாஇருக்கேன்
நீர்மூழ்கிகப்பல்காரா மிதந்துதான் வாயேன்டா
நிப்பாட்டி வைக்காத கால்கடுக்கும் காதலுக்கு
என்பாட்டி உன்னத்தான் எதிர்பாத்து காத்திருக்கு
கஸ்தூரிமஞ்சளுக்கு செந்தூரம் இட்டுவைக்க
சீமைக்கு வந்து நீயும் கூட்டிகிட்டு போயேன்டா