தாகம் தவிக்கிறது ..
வரட்சி வாட்டுகிறது என..
எண்ணம் எழ..
தண்ணீர்
கொடுக்கிறது கண்!
Friday, 5 December 2014
உனக்காக...எல்லாம்
உனக்காக..
இந்த
உயிரும் உள்ளமும்
ஒட்டியிருப்பது உனக்காக..
சுவைக்கு பழமும்..
இனிப்புக்கு சர்க்கரையும்..
உருகும் ..வெண்ணையும்..
உருக்கும் எண்ணமும்..
பிசைந்த மாவும்...
இசைந்த மனமும்..
இன்னும்..இன்னும்..
கலந்தகூழை என்கையால்
செய்தே..
வேகும்...அடுப்ப
ிலே..வேகவைத்தே எடுத்தேன்
உனக்காக..எல்லாம்
உனக்காக..
உன் பிறந்தநாளுக்காக..
என் உயிரான ..
கண்ணதாசனே..!!
நீ வாழ்ந்துகொண்டிருந்தாய்..
உனதருமை தெரியவில்லை..வய
தில்லை
உனது பெருமை தெரிந்தே வாழ்கிறேன்
வீழ்ந்துவிட்டாய் வேறோர் உலகத்தில்
உனைக் கட்டமுடியாத காலம்
சுட்டெரித்தே..
உடன்கட்டி வாழ்கிறேன் உன்பாவை
அங்கங்கு பட்டு ..அங்கங்கள்
தொட்டு..
உருண்டோடும் பாட்டு நீ இட்ட
கூட்டு..
கட்டுண்டே..நானும் கவியெழுதக்
கற்றேன்
நான் பேசநினைப்பதெல்லாம்....
வாழநினைத்தால்...வாழலாம்..
தங்கபதக்கத்தின்மேலே..ஒருமுத்துப்
பதித்ததுபோலே..
விட்டதை நிரப்பி..விடியல
ை நோக்கி..
மீண்டும் பிறந்து வாநீ..நான்
இறந்து பிறக்கின்றேன்
கண்ணதாசனே..! காதலனே..! எனக்குள்
வந்துவிடு
கட்டிப்பிடி என்
கையைப்பிடி சேர்ந்தே பாட்டெழுத..
காலமாகிப் போனாலென்ன..பொல்
லாதகாலம்
ஆகிக் கிடக்குதே காலம் தற்காலம்..!
அது நம்பொற்காலம்!!
நிலா,
நட்சத்திரம்,
தென்றல்
தூறல் என...
எல்லாமே இந்த
வசந்தமாளிகை முற்றத்திலே..
ஏழை வீட்டில் இரும்புப் பெட்டியேது
செத்தையில்தான்
சொருகிருக்கிறேன் தங்கத்தை
தடுப்புக்கூடத் தட்டிதான்!
மெட்டியில்லா வெள்ளியென..பட்ட
ு
விண்ணுக்கு மேலாடை கட்டி
சொல்லுக்கு வில்லுப்பூட்டி அம்பெய்யும்
அழகுக்கு
பூட்டெதற்கு பூபோல
இருக்கு பூகம்பத்துக்கு.