ஆம்- ஈரம்,நீர்,அழகு,
ஓர்அசைச்சொல்\ என்ற
ஒத்தகருத்திது
வாயசைத்து சொல்
வாங்கிக் கொடுக்கிறேன்
என...
இவையெல்லாம் வேண்டும்
நான் உன் செல்லம்தானே..
Friday, 5 December 2014
எங்கு தூக்கிப் போட இந்தப்
போதையை
கண்ணிலா...
கருத்திலா...
என்னிலா..
எண்ணிலா..
உயிரிலா..
உடலிலா..
எங்கு போட்டாலும் மயக்கம்
கொடுக்கிறாயே மதுமதிக்கு
கொஞ்சம் இரு மதிவாணா..
இந்தக் குவளைக்குள்
இருந்தும் ..
உறிஞ்சிப்பார் கொஞ்சம்
விகிதாச்சாரத்தில்
குறைந்திருக்கக்
கூடாது பார்..!
சரிக்குச் சமனாய்..சந்திக்
கவேண்டும் சந்திப்புகளில்..
வா..
வா..
தேன்மொழியில்
எழுது..எழுது மயக்க..வியக்க
அதுகண்டு..
செம்மொழி மயங்கி..மயங்கி விழ..
சர்க்கார் ஒழிக்கட்டும் அதை!
நீ தர்க்கார் இதை!!
ஒழிக்காதே போதையை!
பேதை பேதலிக்கக்கூடும்!!
மதியழகனே..வந்து
விடு இந்த மகரந்தத்துக்குள்.
இம்மண்ணில்.. நீயும்
நானும் ஆதாம்ஏவாள்
ஆவோம்.
பாலையில் நீ
இங்கே வெடிப்பு
அங்கு பசலை இல்லையா..
இங்கு கொழுந்தாக.
அங்குனக்கு அனல்காற்று
இங்கெனக்கு குளிர்காற்று
அங்கே வேலை
இங்கே கவலை
வேலையும் கவலையும்.
சேர்த்துப் பிசைகிறது பாலையை
சாலையை எட்டிப்பார்
சோடி..சோடியாக நடந்தே..
காதலும் பிரியமும்..
இதற்கு ஒரு சாலை போடமாட்டாயா..
மறியல் செய்யாமல்..
வேலியிலே பருத்தி கொழுந்துவிட்டுப
் படர்ந்திருக்கு
பாவி எனக்கு பக்கவேர் இல்லையே...
ஒரு முடிவுக்கு வா..சடுதியில்
நீயா...?நானா..?
இல்லை..
நாமாகி..ஆலையில் கரும்பாகிச்
சாறாக...