Monday, 1 December 2014


மூடி இருக்கும் அழகும்
கூடிருக்கும் முறையும்
உள்ளிருக்கும் வாசமும்..
ஊறிருக்கும் வண்ணமும்
ஒட்டிருக்கும் இதழும்...
யார் சொல்லிக் கொடுத்தார்
இத்தனை விதமாய்...
மலர்ந்துவிடு கொஞ்சம்
கோபுரக்கலசத்துக்குள்ளே..
ஒளிந்து ஒருபுறா சரிந்தே பார்த்திருக்கு
ரோஜாவே... அவிழ்ந்துவிடு
அலகெடுத்து வருமது அள்ளிச் சூட!


அங்கே...
நீ..
பதியமிட்டு வைத்திருப்பது.மலரை!
விதையையல்ல..
எப்படி முளைக்கும்.. — 

கொட்டிக் கொட்டி..
அள்ளியள்ளி
வாரி வாரி..
குழைத்துக் குழைத்து..
எண்ணியெண்ணி..
விரும்பி விரும்பி..
ஒரு பேனா காதலை வெளியிடுகிறது..
ஏன்...
எனக்கு ஊறி வரவில்லை தொட்டெழுத..

ஏன் எட்ட நிற்கின்றாய்..
ஆவி பிடித்துவிடும் என்றா..
கட்டியணைத்தால்..
முத்தம் கொடுத்தால்..
உன்னால் என்ன செய்யமுடியும்
மூடி போடு இல்லையேல் ஆவி தொடும்

நீதான்..
மாந்திரீக மந்திரக்காரனாச்சே
எங்கே விரட்டுபார்க்கலாம்....
அச்சிரத்தகடு போட்டாலும்..
வச்சிரம் இருந்தாலும்..
சித்திரம் அசையாது..
இது ஒருவகை விசித்திரம்
குழையடித்து குழகுதல்செய் இறங்கலாம்....

காதல் உணர்வையுடுத்திக்கொண்டு
கடைத்தெருவுவரைத்தான் சென்றிருந்தேன்
ஏலக்காய் கறுவாய்போல்...
என்வாசனை சென்றிருக்குமோ..
வந்துவிட்டான் என்மாமன்
வசமாய் வசதியாய் மாட்டிகொண்டேன்
வெட்கத்தால் தலைகவிழ்ந்தால்.
விடாமல் குடிக்கின்றானே..
உடுத்தியதை உதறி ஓடிவரமுடியவில்லை
படுத்தினான்...பாடு..
என்மேல் பிரியத்தைச் சுற்றிநனைத்து!
வீடோ..
அன்புவழிபுரம்
தேடிவருவதற்குள்..
முற்றிலுமாய் நனைந்திருந்தேன் அவனின் பிரியத்தால்!!

காதல் உணர்வையுடுத்திக்கொண்டு
கடைத்தெருவுவரைத்தான் சென்றிருந்தேன்
ஏலக்காய் கறுவாய்போல்...
என்வாசனை சென்றிருக்குமோ..
வந்துவிட்டான் என்மாமன்
வசமாய் வசதியாய் மாட்டிகொண்டேன்
வெட்கத்தால் தலைகவிழ்ந்தால்.
விடாமல் குடிக்கின்றானே..
உடுத்தியதை உதறி ஓடிவரமுடியவில்லை
படுத்தினான்...பாடு..
என்மேல் பிரியத்தைச் சுற்றிநனைத்து!
வீடோ..
அன்புவழிபுரம்
தேடிவருவதற்குள்..
முற்றிலுமாய் நனைந்திருந்தேன் அவனின் பிரியத்தால்!!


நான் மறக்க நினைக்கும் தருணங்கள்
பார்த்து..
நீ..
பறக்க நினைக்கிறாய் என்னுள்
கிறக்கத்தைக் கொடுத்து
இறங்க மறுத்து
கிளுகிளுப்பு செய்கிறாய் கிழத்திக்கு!

நான் உன் பக்கத்தில்கூட வருவதில்லையே..
நீயேன் என் பக்கத்திலேயே..சுற்றுகின்றாய்

பஞ்சாமிர்தம் கொடுக்கின்றாய்..
பாடச்சொல்லிக் கேட்கின்றாய்.
பாலம்கட்டி வரச்சொல்கின்றாய்.
பாசவலை பின்னுகின்றாய்..

வெட்கத்தை விட்டுச் சொன்னால் நான் பெண்ணல்ல..
இதைக் கூட்டிப் பெருக்கி சமனாய் நின்று சொல்ல முடியவில்லை
இதைப் பிரித்துவிட்டு என்னைச் சொல்ல வைக்காதே
அந்தக் காதலர்கள் சொல்லும் மூன்று வாக்கியத்தை! நான் பாவம்!!