Thursday, 11 December 2014

அம்மான் மகனே..
அத்தை மகனே...
அத்தானே...
மச்சானே...
முறையானவனே..
வெற்றுத் தாளில் முத்திரை இட
வா!
சித்திரையில்..
முகவரியும்
சேர்த்தெழுது பச்சை மையில்
உன்மையில் பத்திரமாய் காக்க...
வெளியில்வர
உனக்கு வழியில்லை
தேடிவர எனக்குத்
தெரியவில்லை
உடலில்லா உனக்கு..
உயிரில்லா நான் அனுப்பும்
தபால்
ஆசையில் ஓர் கடிதம்..
என் கண்ணீரால்
எழுதி வந்தேன்...

No comments:

Post a Comment