Friday, 12 December 2014

குரலைப் பிடித்து..
கூடு..கட்டினானொ
ருவன்
மனதைப் பிடித்து
மாளிகை கட்டினான்
இன்னொருவன்
பேச்சைப் பிடித்து
பெல்ஜியம்
போகலாமென்றான்
மற்றொருவன்
மூச்சைப் பிடித்து..
பிணையென்றான்
இன்னுமொருவன்
நளினம் பிடித்து
தாளிதம் செய்தான்
தில்லையன்
நடைபிடித்திருக்கிறது..
இடையும் பிடிக்க
இருக்கின்றதென..
எடைபோட்டு இப்படிப்
பேசியே.. படியேறப்
பார்க்கிறார்கள்
உடையை மட்டும்
காணாமலே...
அனைவரும் பாரதியும்
இல்லை ..கண்ணம்மாவும்
இல்லை இப்போ...

No comments:

Post a Comment