மெழுகி கழுவி சாணமிட்டு
ஒழுகி ஓதிக் கானமுடன்..
ஆக்கிக்காச்சாமல்..
பாத்திரம் தொடாமல்..
பட்டனியாய் தவமிருந்தேன்
கடும் பசிபோலும்
உணவுகேட்டு குடிசையில்
நுழைந்ததோருயிர்
என்னிலை புரிந்தும்...
பசிக்கு எரித்துக்கொடுப்
பது ஏழைக்கழகு
ஏழ்மை புசித்துக்கொடுக
்கும் புன்னகையழகு
பொங்கிப்
போட்டு புத்துணர்வானேன்
பாவந்தான்......
பாக்கியின்றி உண்டுகளித்து
போக்கிக்
கொண்டது வெற்றிடத்தை
அருங்கொம்பில்
இருந்து அருந்தப்பு தப்பி
ஆனந்தமாய் மறைகிறான்
அந்த ராப்பிச்சைகாரன்
ரவிவர்மன்
ஓவியத்தை தட்டியெழுப்புகி
றது வைகறை
No comments:
Post a Comment