செய்வன திருந்தச் செய்யென..
என் பாட்டியும் சொல்லிருக்காக..
உன் பாட்டி உனக்கு ஊட்டிவிடவில்லையா..
திரும்பிருக்கே
திருகாதே.. வலிக்கும்
திருப்பிவிடேன் நேராய்...அந்தக் காதலை
Tuesday, 24 February 2015
Monday, 23 February 2015
{மகா கொடுத்த படத்துக்காக..}
{1}
காற்றுன்னைக் காயவைத்திருக்கலாம்..
மழையுன்னை ஏமாற்றிருக்கலாம்..
இயற்கைகூடக் கண்மூடியிருந்திருக்கலாம்..
அன்பே...
வெடித்த உன் இதயம்கண்டு
நான் தொடுத்திருக்கும் அழகைப்பார் !
===================================
{2}
தவறுசெய்வது இயல்புதான்..
செய்தவைகளனைத்தும்
விழுந்து..
வெடித்துக்கிடக்கிறது பார்
புரிந்தணைத்து.
வேர்விட்டு வெளிவந்த விசுவாசக்கொடியால்
{1}
என்னுள்வைத்து அடைகாக்கத் தெரியவில்லை
அவன்மேல்கொண்ட காதலையும் பிரியத்தையும்
பிடியென...
வைத்தேன் உள்ளங்கையிலே இருகருவையும்
அட....
கைமாறாக
இந்த உயிர் உனக்குத்தானென
தூக்கிக் கொடுத்தானே ஆடென....
=================================
{2}
உயிர்களை உன்னதமாய் நினைக்கும் பிரியமானவன்
உதாசீனப்படுத்துவதுமில்லை..
உயிரைவாங்குவதுமில்லை..
அவர்களின் எதிர்காலம் என்கைகளில்தானென
நம்பிக்கையுடன் ஏந்துகிறான் தன் பெற்றோரை
அவனின் உயிரும் உடலும்..
அவள் கையில்தானென ஒப்படைக்கிறான்
அவளின் ஒளிவிளக்கான உள்ளத்தில் உறவாட வாவென
கிராமத்தன்பு இப்படித்தான்போலும் ஒட்டியொட்டி
முறையான அவளுடன் முறையுடனே ..
Sunday, 15 February 2015
Saturday, 14 February 2015
Friday, 13 February 2015
Sunday, 8 February 2015
தாத்தா.......
ஆத்தாவும் இல்ல
அப்புவும் இல்ல
எப்பவும் நான் பறக்கிறேன்தான்
நீ வாகிக் கொடுத்ததை யாரும் தருவதாயில்லை
ஏங்கிப்போய்...
தாங்கிப் பாத்தேன்
வீங்கிப்போனதுதான் என் வீரம்
பாங்கிக்குகூட பயம் தேங்கியே...
தூங்கிகிடந்த துணிவை தூசிதட்டினேன்..
நீ கொடுத்ததை எனக்கு நானே
இருபாகங்களிலும் கட்டிகிட்டேன்
யாருக்கும் அடிமையில்லையென..
வடிவமைத்து விரிகிறேன்...
தாத்தா....
நான் உன் பேத்தியல்லவா...
மிதிப்பேனா !
மதித்துதான்...
கழட்டிக் கொடுக்கவேமாட்டேன்
நீவாங்கிக் கொடுத்த அந்த அழகுசட்டையை
கடவுள் வந்து கேட்டாலும்....
Friday, 6 February 2015
ஒரு தங்கச் சுரங்கம்
மூடப்பட்டுக் கிடந்தது
சூழப்பட்ட பாறைகளால்
தேடப்பட்டு வந்த கண்ணில்..
தென்பட்டது முதல்பார்வையிலே..
துளையிட்டு துவாரமிட்டு ஊடுருவி
சொல்லடித்து செல்லத் துடித்தது
கல்மேலே செதுக்கி வைத்த பாசத்தால்
வில்லாய் வளைந்து வழிகாட்ட
மெல்லபிடித்தது உள்ளறையை
திரண்டு வந்த காதல்..
உருண்டு புரண்டு கட்டுண்டு
பிடித்து ஒளிந்து விளையாடி
வெடித்து சிதறி மறைந்தது
கொள்ளையடித்துச் செல்லும் போது...
கொன்றுபோட்டுப் போகும்போது ....
கன்றை மறந்து போனாயே...
கல்லை கலங்க வைத்தாயே...
உள்ளம் ஒன்று உனக்கில்லை
உள்ளே அன்பென்ற ஒன்றும் அங்கில்லை
கடைசிப் பார்வை பாத்தாயே...
காலம்போன கட்டைமேலே ..கள்ளா..!
கள்ளிபோல குத்தினாலும் கள்ளுப்போல தேடுதே..
இந்த சொல்லுகேளா ஊமை இதயம்
அன்பே ! என்னன்பே!! உன்னன்பை!!
Thursday, 5 February 2015
உயிருக்குள் உய்யும் மெய்யே..
தடம் பதித்துச் செல்லும் அழகும்..
ஒழுகிக் கசிந்துபோகும் அன்பும்...
மசித்த பருப்புபோல் உருவம் காணாமல்..
சகித்தே சுமக்கும் பாங்கும்..
நீ
வசித்து வாழும் கூட்டை
உசத்திப் பார்க்க வைக்கிறாய்..
உணர்வுக் கொம்பின் உதவியால்..
கையும் களவுமாய் பிடித்தேன்
நான் கழன்றால்...ஓடு
நீ மடிந்தால்..உயிர்
உயிரோடு இருக்கும்போதே...
சொல்லிவிடேன்......
கலைமகளே...!
உன் கைப்பொருள் நான்
எப்பொருளும்..
எம்மனமும்..
எவ்மணமும்..
எக்கணமும்..
உள்வாங்க..
மீட்டிக்காட்டும் என் மீனாம்பிகையே..!
உன்தாள் சரணம்
தில்லைக்கூத்தரே சரணம்
என் மானசீகக் குருவே..காளமேகரே..!
சரணம்!சரணம்!! சரணம்!!!
{அனைத்து உள்ளங்களுக்கும் ,உள்ளங்களிலும் அணைத்து எம்மொழி ஊற..
அம்பிகை அருள்வாரென..நான் கைகூப்பியே...
பஞ்சும் நெருப்பும் பக்கத்தில்
பற்றி...
பிடித்து..
அணைவதில்லை
மெய்யாலும் ..
விழுது உருகுவதில்லை
மெய்வாளும்..
கூர்மை மழுங்குவதில்லை
மெய்வாழும்.. வீணைக்குள்ளே !
எண்பாட்டில் நானிருக்க.
தண்பாட்டில் அவனிருக்க..
பண்பாட்டின் பதம் பிழைத்து பதராவதுமில்லை
தும்பை மழித்த துளசிக்கூட்டுக்குள்ளேயிருந்து
கற்பின் நறுமணம் காற்றில் வருகிறதா...
கனவு
நானும்...
கண்டேன் கனவு
அதை நனவாக்கப் பாடுபட்டேன்
சமூகம் பட்டதுபாடு..
ஏற்கமுடியாதெனத் துள்ளிக்குதித்து
என்னால் அவர்களின் ஆட்டத்துக்கு
ஈடாக..
ஒத்துழைக்க முடியவில்லை
காலில்லாமல் ..
கைபிடிக்கக் கனவுகண்டால் பலிக்குமா..
நாக்குவழிக்கும் நல்லபாம்புகள் இருக்கும்வரை
கனவு நனைகிறது குடைபிடிக்க யாருமின்றி..
Wednesday, 4 February 2015
ஒரு கல்லைக் கொடு
கலைவடிக்கின்றேன்
ஒரு சொல்லைக் கொடு
கவிதையாக்குவேன்
பொல்லைக் கொடு
புல்லாங்குழல் பிறந்துவரும்
வில்லைக் கொடு
விசயனைப் பார்..
ஏட்டைக் கொடு
காவியம் காண்பாய்
இமயத்தைக் காட்டு..
ஏறிவிடுகிறேன் ம்ம்ம் என்று சொல்லும் முன்பே
இதயத்தைமட்டும் பருந்துகளுக்கு இரையாக்காதே
என்னியக்கம் நின்று நீயடக்கம் செய்ய நேரிடும்