Thursday, 12 March 2015

இசையும்..கதையும் {1}
========== =======
ஹாய் செல்லம்
சொல்லுடா வந்துவிட்டாயா , சரி உள்ளே வா !
ம்ம்ம்.. சரிடா சொல்லு..சொல்லு எங்கே போகலாம் இன்று. இன்றுனக்கு விடுமுறையல்லவா.. உன்னைய நான் ஒரு பிடிபிடிக்கனும் எல்லாச் செலவும் நீதான் என்றேன் அவனிடம்
சரி நானே சொல்லட்டுமா.. என முந்திகொண்டேன் முந்திரிக்கொட்டைபோல்! . பூங்காவுக்குப்போய் காற்றுவாங்கி, அப்புறம் சினிமாவுக்குப்போய் கதைவாங்கி, அப்புறம்,அப்புறம் கோயிலுக்குப்போய் தாலிகட்டி வருவோமா என்றேன் என் முறையான அத்தானிடம் முட்டிப் பார்க்க.
ஐய்யோடா..அவசரத்தைப் பாரேன் என் வருங்கால வாயாடிக்கு என்று.. ..எங்கே என்னத்தை அத்தை..அத்தேய்.... இங்க பாருங்க உங்களின் பொண்ணு தேவியை! என்னைய வில்லன் ஆக்கப் பார்கிறார் என்றான் என் அத்தான் தலையைநீட்டி என் அம்மாவின் அறையைநோக்கி..
அண்ணன் மகனல்லவா..பாசம் அம்புட்டுப்பாசம் , என் அத்தான்மேல்.. தம்பி அவளைப்பிடித்து ஒரு மூக்கணாங்கயிறிடு என்றால் தள்ளிப்போடுகிறாயே..இன்னும் சிலமாதங்கள் ஆகட்டுமென.. நான் என்னப்பா செய்ய என்று என் அம்மா நழுவிவிட்டார் புன்சிரிப்புடன்.
என்னத்தான் அத்தனையிலும் .. சுந்தரம்தான்!, அதையறிந்துதான் என்மாமா இட்டாரோ அவனுக்கு சுந்தரம் எனப் பெயர். தமிழென்றால் உயிர், தாயென்றால் இதயம், தந்தையென்றால் துடிப்பு ..நானென்றால் இவை மொத்தமும் சேர்ந்தே.. சேமித்திருந்தான் என்னை! களித்தான்,திளைத்தான் .. என்னத்தான் நாட்களை, அவனுடன் எனக்கும் போவது தெரியவில்லை பொழுது! எங்களின் காதல் மனிதக்காதல் அல்ல..
இப்படிவசந்தமாய் இருக்கும்போதுதான்..
வாழ்விழந்தது வசந்தம் ஓர்நாள்! என் அத்தான் விபத்தில் சிக்கி......
ஓ..ஓ..ஓ. நான் இறங்கும் இடமல்லவா..கடந்துவந்த நினைவிலிருந்து விடுபட்டு அவசர அவசரமாக..பேருந்தில் இருந்து இறங்குகிறேன்..
இறங்கி நடக்கின்றேன் என் அத்தையின் வீடுநோக்கி கதவைத்திறந்துவைத்து என் வரவுக்காகக் காத்திருக்கிறார் .. பெற்ற மகனால் சீர்குலைந்த என்னத்தை!
அத்தை.. கட்டியணைக்கிறேன்.. சாப்பிட்டீர்களா அத்தே ..மாமா எங்கே .. அத்தான் சாப்பிட்டிருக்காதே .. என என் அத்தானின் அறையை நோட்டமிட்டுத் திரும்பினேன் என் அத்தைய்யின் கண்களில் குருதி வடியக் காத்திருந்தது. அவரை திசைதிருப்ப
அத்தே..அத்தே..ஒரு சேதி தெரியுமா..உங்கண்ணா..அதுதான் என் அப்பா சாயங்காலம் வருகிறாராம் உங்களையும்,மருமகனையும் கண்ணில் ஒற்ற என்றேன்..
அந்தக் குருதிக் கண்ணிலும் ஒரு மின்னொளி பளிச்சிட்டது அப்போ.. அத்தனை பாசம் என்னப்பாமேல் அவருக்கு.
அத்தே .அப்புறம் நீங்க சமைக்கனும்தானே உங்க தம்பிக்கு அதனால..போய் ஓய்வெடுங்க நான் அத்தானைக் கவனிக்கிறேன் என..அத்தையை அவரின் அறையில் தள்ளிவிட்டு..மெதுவாக அத்தான் என்றேன் ..அபிராமிஈஈஈஈ ஓடிவந்து ஒட்டிகொண்டான். . சாப்பாட்டைக் கையில்லேந்தி அவனுக்கு ஊட்டிவிட எத்தனித்தேன்.. அதில் விருப்புக்காட்டிய உணர்வின்றி..என் கையைப்பிடித்துத் தூக்கி, சுடிதாரைத் தொட்டுப்பார்த்து, பொட்டைக் கிள்ளிப்பார்த்து முடியைத் தொட்டுப்பார்த்து குழந்தையென இருக்கிறான் என் அத்தான் சித்தம்கலங்கி..
மிகவும் கஷ்ரப்பட்டு அவனோடு அவனாகி .. உணவளித்தேன் என் உயிரான அத்தானுக்கு ! என்குறும்பு, என்கோபம், என்சிரிப்பு, நான்கொடுக்கும் கஷ்ர நஷ்ரம் இப்படிப் பலவும் தாங்கிய தாயுமானவனாச்சே ..
நான் இதுகூடச் செய்யவில்லையென்றால்...
ஒருகணம் என் தாயை நினைத்தேன் . என் அத்தானுக்கு இப்படி ஆகியதென அறிந்தவுடனேயே .. படுக்கையில் விழுந்துவிட்டார் பாரிசவாதமென .. அத்தனை பிரியம் அவன்மேலும் என்மேலும்..எங்களின் எதிர்காலத்தையெண்ணியே.. இப்படியாகிவிட்டதுபோலும்... என் தாய்க்கு!
என் சிந்தனையைக் கலந்தான் என் அத்தான். என் காதருகில் வந்து அபிராமீஈஈஈ என்றான் அந்தவிபத்துக்குப்பின் தேவியாகிகநான் அவனின் சித்தத்தில் அபிராமியாகிவிட்டேன்.
அத்தான் விளையாடலாம் வாங்கோ.. எங்கே தாள் ,பேனா, வண்ணமெல்லாம்.. எடுங்கோ.. கவிதையெழுதி,ஓவியம்வரைந்து என சொல்லி,, எடுத்தேன் அந்தப் பொருட்களை! அவன் நின்றிருந்தான் ஜடமாக. நான் என் அத்தான் எனக்கு வேண்டும் பழையபடியே... என்ற முயற்ச்சியுடன்..பயிற்சியுடனும்! என்னைத் தீட்டிக்கொண்டிருந்தேன். என்னை அணைந்தே உட்காந்தான் சிறு குழந்தைபோல்.. அவனுக்கு நான் தாயானேன் அப்போது .. என் கருவறைகூடக் கனக்கிறது அவனின் சிதைவையெண்ணி..
கண் நோவு,மனசு வலி, எண்ணம் அழுகை, இறைவா,,! என..இவைகளை என்னுள்ளடக்கி .. உள்ளத்தைக்காட்டுகின்றேன் அவனிடம் ஒளிவிளக்காக..
அவன் என் அத்தையின் குலவிளக்கல்லவா.. அவன் களைத்து என் மடியில் உறங்கிவிட்டான் மெதுவாய் தலையை இறக்கிவைத்து கட்டிலில் படுக்கவைத்து என் அன்பு அத்தானுக்கு ஆசையாய் முத்தமிட்டேன் நெற்றியிலே அத்தனை பாரத்தையும் இறக்க..! நான் அவனிடம்காட்டும் முத்திரைதான் இது தினமும்.. அறையைச் சாத்திவிட்டு .. படியிறங்கலாம்.. என் அன்னையைக் கவனிக்க வேண்டுமே

Monday, 9 March 2015

கல்லை உரசி
தீ மூட்டினர் ஆதிவாசிகள்
சொல்லை உரசி.. அமிர்தத்தைக்காட்டி
இதயத்தைக் கூட்டி
காதலைப் பூட்டி
பலவாட்டி...
இழுத்தெடுக்கப் பார்க்கிறானே..
கல்லுக்குள் இருக்கும் அந்த தேரையை
கசடறக் கற்ற அந்த தமிழ்வாணன்.


கொஞ்சம் சளிக்க பூசிவிடு
வேப்பெண்ணையை
உன் இதயத்தில்...
சலிப்பு வந்தாவது..
சழிந்து கிடக்கும்
என் இதயம்
சுவைக்காமல் இருக்கட்டும்!

சந்தோசமிகுதியில்..
அங்கோடி இங்கோடி
பாய்ந்தோடி வழிந்தோடி..
கிசி கிசுவென..
கூடிக் கூடிப் பேசிகின்றன
என் இரத்தநாளங்கள்
சக்கரை அளவு மிக மிக அதிகமாம்
அவைகளுக்கெப்படித் தெரியும்
கரும்புமொழியில் இருந்து
விழிந்து வரும் இரும்பு
இந்த
இரும்புக்குள் பாய்ந்துகொண்டிருப்பது...!

இதயத்தில்...
பலபேர் இருக்கலாம்..
போகலாம்..
வரலாம்..
அது ஒரு வாசல்படி

நீ
உலர்த்திகோதிக்கொண்டிருக்கும் போது
உனக்கே தெரியாமல்..
இறக்கைக்குள்
நுழைந்துவிட்டேன் வாஸ்துபடி
உனை நான் வாழவைக்க.

என் கணவனைப்பற்றி...அறிமுகப்படுத்தி வைக்கிறேன்..

பூக்கள் விரியும்போது ..ஒரு மணம்வருகின்றதல்லவா...
பெரியவர்களைக் கண்டவுடன் ..ஒரு மரியாதை தோன்றுகின்றதல்லவா..
குழந்தைகளைக் கண்டால் .அள்ளியணைத்துக் கொஞ்ச ஒரு ஆசை எழுமல்லவா...
சுவையான..அதிலும் பிடித்த உணவைக் காணும்போது ஒரு ஆவல் வருகின்றதல்லவா..
விரும்பிய..நாடெல்லாம் பார்க்கவேண்டும் என்று எண்ணும்போது.. வரமாய் வந்துவிழுகின்றதல்லவா...
கோயிலில் ..திரைவிலகி மூலஸ்தானம் தெரியும்போது.. ஓர் உணர்வு தோன்றுமல்லவா...
வறுமையில் வாடும்போது.. கோடிக்கணக்காய் ஒரு லாட்டரி விழுமல்லவா..
கண்ணிழந்தவர்க்கு.. பார்வை கிடைக்கும்போது ஆனந்தொளி தோன்றுமல்லவா...
இத்தனை உணர்வுகளையும் ஒன்றாய்க் குழைத்தெடுத்து
என்னில் பூசிப்பூசியே...
ஒவ்வொருநாளும்..
என்னைக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கும்
என் மதிவாணன்தான்
என் கணவன்..!
உங்களுக்கும் இப்படிக் கிடைத்திருக்கின்றானா ஒருவன்...
இல்லவே இல்லை.. அப்படித்தானே..
ஏன் என்றால்..
என்னைப்போல் அழகியாய் நீங்கள் இருக்கமுடியாது
நான் கோயிலுக்கும் போவதில்லை
அத்தையும்,அம்மானும் என்வீட்டில் இருப்பதால்..
தொழுநோய்காரிக்கு தொண்டென . தங்களை அர்பணித்துக்கொண்டிருக்கும்
தெய்வங்களிடமிருந்து நான் அழகியாகிக்கொண்டுதான் இருக்கின்றேன் .தினம்தினம்..!!

எப்படியோ.....
தவறிவிழுந்துவிட்டேன் அந்தச் சாக்கடையில்
தூக்கி நிறுத்தவோ..
தாங்கிப்பிடிக்கவோ..
தட்டிக்கொடுக்கவோ..
கரங்கள் நீளவில்லை
“உடல்தேவையாம்”

தவறிக்கொண்டேயிருந்தேன் ..அறியாமையால்..
தவறவைத்துக்கொண்டிருந்தனர்..பெண் என்பதால்..
நான் கூனியல்ல..
நிமிரவிடவில்லை விருந்தாளிகள்..

அடித்த நீச்சல் போதுமென்று உடலசர...
மெல்லத் தலையை நீட்டி வெளிவரப்பார்த்தால்...
கரையை எங்கோ தவறவிட்டுவிட்டேன் என் இளமையின் வேகத்தால்
சரி...
ஒரு முயற்ச்சியுடன் தவழ்ந்து வருகிறேன் கண்டுவிடலாமென..
ஓ.ஓ..ஓ..ஏதோ ஒன்று என்னை அழுத்துகின்றதே..
அதுதான் புதைகுழியாம்..!
தவறிவிழுந்தாலும்.. தெரிந்துவிழுந்தாலும் விடாதாமே..
என்னை இழுத்துக்கொண்டிருக்கிறது கொஞ்சம் கொஞ்சமாக..
இப்போ இதற்கு “உயிர்” தேவையாம்
முன்னால் உடலைக்கேட்டார்கள் இது உயிரைக்கேட்கிறது
எடுத்துவிட்டுப்போ... எயிட்ஸே..
நீயாவது தொட்டுக் கேட்டாயே..
இல்லையென்றால் ..
தேவைக்கு தொட்டுக்கொள்ளும் ஊறுகாய்போல..
அந்த நரகத்தில் இன்னும்நான் நெளிந்துகொண்டுதானிருப்பேன்..!!

தங்கத்தாமரை நான்..
தாங்கவா சூரியனே..
சுட்டாலும்..
பட்டுத்தான் என் இதழ்
நீர் பட்டுத்தான் ..
நீரின்றி நானேது..
நாமின்றிப் பூவேது..
பூவின்றி அழகேது..
அழகின்றி மணமேது..
மணத்துக்குள்தான் நல்லதும்,கெட்டதும்
அதற்குக் காரணம் மனம்தான்!

சின்னச் சட்டையில்..
பாவாடைசட்டையில்..
தாவணிபாவாடையில்..
சுடிதாரில்..
ப்பாண்டு ஜீன்ஸில் ..உள்ள உணர்வுவெகுளியெல்லாம்..
வழித்தெடுத்துப்
பொம்மையைச் சேலைக்குள் திணித்தடைத்து
சென்றுவா என்றால்...

பருத்தியை உடைத்துப்பார் ..
அந்த உணர்வுதான் என்நெஞ்சு
புரிந்து திரித்திருக்கிறாயா..
திரியென...
இல்லையே..
உணர்வுகளைத் தொலைத்து உணர்ச்சிக்குமட்டும் ஆளாக்கி
இரு அறையிலே..
அடைத்துவைத்திருக்கிறாயே..
ஒன்று எரிகிறது..
மற்றொன்று எரிக்கிறது !கட்டிவைத்துத் தீனீபோட்டால்...
திரியென...
நீ சொல்லும்வரை எனக்கே தெரியாது நான் சுடரென..
இப்படித்தான் எனச் சொல்லவில்லை..
இப்படியும் சில...

இன்றெனக்கு என்ன பரிசளிக்கப்போகிறாய்
இன்றே அளித்துவிடு..
அப்புறம்..

எனக்குக் கூச்சமாய் இருக்கலாம்..
நீயும் கூச்சத்தை மறக்கலாம்..

உனக்குநான் கண்ணுதானே..
அதனால்
இரு பரிசளி
ஒன்று “சூழ்நிலை”
இரண்டு “சமயசந்தர்ப்பம்”
இவையிரண்டையும் எடுத்து
எனக்கு அழகாகச் சுற்றிக்கொடு
பின்னால் சொல்லிக்காட்ட முடியாதல்லா..

ஒன்றுனக்குதிர்ந்தால்...
என் உயிர் மாய்ந்துபோகும்
நான்கேட்டதை எனக்களி
பின் ..
உன் கற்பைக்கூட நான் கேட்கமாட்டேன் ஏனென்று..!!

இன்று நுட்பமாகப் படியுங்கள்
பக்கம் பக்கமாகச் சென்று..
உளிகளே...
சிற்பங்களின் மனம் பேசும்நாள்
குறிப்பெடுங்கள்
குறித்தும் வைத்துக்கொள்ளுங்கள்
அவளை அழகாக்க...


இன்றுமட்டுமாவது
உன்தோளைக் கொடேன் சாயவேண்டும்
என் சாயங்களைப் பூசும்போது.
கண்ணீர் கழுவக்கூடும்.


இன்றுமட்டுமாவது
உன்தோளைக் கொடேன் சாயவேண்டும்
என் சாயங்களைப் பூசும்போது.
கண்ணீர் கழுவக்கூடும்.

இன்று...
அன்பு உன் மனைவியானால்..
நான் பிரியம்....!!

ஹலோ..ஹலோ,,ஹலோ.. சிங்கங்களே..
பொழுதும் போகப்போகிறதே..யராவது..எவராவது
நேக்கு ஒரு பரிசுகொடுத்தீகளா..

ஒரு குண்டுமணியளவாவது.. இல்ல.. எளிமையாகத்தான் எழுத்திருக்கே அதில ஏதாவது கோர்த்து ..ம்ம்ம்கும் .. நேக்கு கவல வந்திடிச்சே..அப்புறம் .அம்மா,.அக்கா,தங்கை,நண்பி,தோழி,காதலி, பாட்டி பூட்டி மச்சினிச்சுஎன்று நான் எதற்க்கு பூட்டிகிட்டும்,தூக்கிகிட்டும் திரியனும்.. போங்கடாஆஆஆஆ..நான் டூஊஊஊஊஊஊஊஊ...
இன்னைக்கு நானூஊஊ.. இரும்புக்கதவை உடைச்சு ..அச்சம்,மடம்,நாணமெல்லாம் அணிஞ்சுகிட்டு.. புடவையைக் கட்டிகிட்டு ..
ஓடிவந்தா.. ..பார்டா.. மோகன் வந்து ஏட்டுராக.. ..ஓடிவாங்கோஓஓஓ.. இவக தூக்கிகிட்டுப் போகும்முன்னாடி.. பரிசோட..


எழுதிக்கொடு என்றேன்..
மையில்லையென்றான்
எடுத்துக்கொடு என்றேன் ..
அடியில்லையென்றான்
வடித்துக்கொடு என்றேன்..
தமிழில்லையென்றான்
பின்..
எப்படித்தான் கொடுப்பாய் உன் இதயத்தையென்றேன்
பெண்ணே..!
நீ..
பிடித்துக் கட்டிருப்பதால்தான்
இந்தக் குழைபோட்டுத் தடவுகிறாய் கொம்பிலே..
தேனே..
எனக்குத் தெரியாதா என்றானே பார்க்கலாம்...

Friday, 6 March 2015

செல்லங்களே...
நான்விடும் கதையிது .விடுகதைபோல்...
உங்களின் புலன்ஆய்வுக்கு ஆய்ந்து சொல்லுங்களேன் இந்தப் பதிவின் விளக்கத்தை ..என்ன..?என்னவாய்இருக்கும்..? எப்படி..? இப்படியெல்லாம் சிந்தித்து...பதில்வேண்டும்.
ஆனால் ஒரு மகிழ்ச்சியான தம்பட்டம் ..டும்..டும்..டும்ம்ம்ம்ம
சகலருக்கும் அறியத்தருவது யாதெனில்..
அச்சோட்டான பதிலைக் கொடுப்பவர்க்கு சிங்கையில் இருந்து என் தகுதிக்கேற்ப இனிப்பு {சொக்லட்} தகுதி பெற்ற ஒருவருக்கே...அனுப்பிவைக்கப்படும்..டும்..டும்..டும்ம்ம்ம்ம்
அவித்துவிடுங்கோ அழகை... பார்க்கலாம்...
======================================================

என்னிடம் இருக்கின்றது ஒருபங்கு
அதை இரண்டுபங்காக்கினேன்
பின்..
அந்த
ஒவ்வொரு பங்குகளையும்
முறையே..
மூன்றுபங்குகளாக்கினேன்
பின்..
முறையே..
மூன்றையும்
என் புத்தியால் ஒருபங்காக்கினேன்..
பின்..
முறையே..
இரண்டுபங்குகளாக்கித் தூக்கிக்கட்டினேன்
பங்குகளைச் சுமந்துகொண்டு..
சந்தைக்குப் போனேன்.
அங்கிருக்கும் வியாபாரிகள் சொல்கிறார்கள்
சோ கியூட்..சோ கியூட்டென..அதிசயமாக....


இன்று
பெளர்ணமியல்லவா..
உனக்கும் தெரியுமா..
ஒரு முத்தம் கொடேன்..
முழுநிலவுக்கு..

Tuesday, 24 February 2015

செய்வன திருந்தச் செய்யென..
என் பாட்டியும் சொல்லிருக்காக..
உன் பாட்டி உனக்கு ஊட்டிவிடவில்லையா..
திரும்பிருக்கே
திருகாதே.. வலிக்கும்
திருப்பிவிடேன் நேராய்...அந்தக் காதலை


நங்கூரம் இட்டிருக்கிறது நகரமுடியாமல்..
இந்தக் கப்பலை இழுபார்க்கலாம்..
உன் கவிதையால்..

Monday, 23 February 2015


{மகா கொடுத்த படத்துக்காக..}
{1}
காற்றுன்னைக் காயவைத்திருக்கலாம்..
மழையுன்னை ஏமாற்றிருக்கலாம்..
இயற்கைகூடக் கண்மூடியிருந்திருக்கலாம்..
அன்பே...
வெடித்த உன் இதயம்கண்டு
நான் தொடுத்திருக்கும் அழகைப்பார் !
===================================
{2}
தவறுசெய்வது இயல்புதான்..
செய்தவைகளனைத்தும்
விழுந்து..
வெடித்துக்கிடக்கிறது பார்
புரிந்தணைத்து.
வேர்விட்டு வெளிவந்த விசுவாசக்கொடியால்

{1}
என்னுள்வைத்து அடைகாக்கத் தெரியவில்லை
அவன்மேல்கொண்ட காதலையும் பிரியத்தையும்
பிடியென...
வைத்தேன் உள்ளங்கையிலே இருகருவையும்
அட....
கைமாறாக
இந்த உயிர் உனக்குத்தானென
தூக்கிக் கொடுத்தானே ஆடென....
=================================
{2}
உயிர்களை உன்னதமாய் நினைக்கும் பிரியமானவன்
உதாசீனப்படுத்துவதுமில்லை..
உயிரைவாங்குவதுமில்லை..
அவர்களின் எதிர்காலம் என்கைகளில்தானென
நம்பிக்கையுடன் ஏந்துகிறான் தன் பெற்றோரை
அவனின் உயிரும் உடலும்..
அவள் கையில்தானென ஒப்படைக்கிறான்
அவளின் ஒளிவிளக்கான உள்ளத்தில் உறவாட வாவென
கிராமத்தன்பு இப்படித்தான்போலும் ஒட்டியொட்டி
முறையான அவளுடன் முறையுடனே ..

ஒருபுறம் உலகம்
மறுபுறம் வாழ்க்கை
அந்த வாழ்க்கையின் ஓரத்தில்தான்..
“நான்” என்ற ஒற்றையாணிவேரை
நம்பிப் பிடித்தே..
தள்ளிவிட்டேன் பட்டுவந்த துன்பங்களை
அந்தப் பள்ளத்திலே..

Sunday, 15 February 2015


உனக்குப் பிடிக்கும் என்பதற்காக...
இந்தக் கவிதையை நான்விரும்பி எழுதினேன்
உன் பேனாவில் இருந்து கசிந்து வந்த மையினால்...

நீ
கத்தரி
காய்தான்....
ஒரு ஓட்டையும் இன்றி
ஒருவரும் கண்டுகொள்ளாமலும்...
உள்ளே புகுந்து
உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
உன் சதைக்குள்
உனக்குக் கூட தெரியாமலிருக்கலாம்


தூரதேசத்தில்..
எனக்கான அந்தச் சிறகு
ஒளிந்து கொண்டிருக்கின்றேன்
மரக் கிளைகளுக்குள்
என் இயல்லாமை படாதிருக்க
வல்லூறுகளின் பார்வையிலிருந்தும்..
என் கோலத்தையும்
மூடிக்கொண்டிருக்கிறேன்
விடியாதிருக்கும் வரை..


அந்தகாரி கை பிடிக்க
ரவி வர்மன் தூரிகை
உண்டு களித்து
உருவாக்கிய உதயசூரியன்.
தென்றலும்..நிலவும்..
காதலாயும்..காவலாயும்..
இந்த இளங்கதிருக்கு.


என்
குடிலுக்கு வரத்தானே...
வழி கேட்கிறாய்...
இதோ....

1 ம் குறுக்கு தெருவுக்கு வா ..!

4 ம் சந்தி தெரியும் அதிலிருந்து திரும்பு

3 ஆம் ஒழுங்கை வரும்

அந்த சந்தில்தான் இந்த பொந்து
மக்கு மாமா...மறக்காதே இந்த இலக்கத்தை


என் நகையை ஈடு வைத்துவிட்டேன்
அந்த
அடகு கடைக்காரனிடம்
வாயகம் வாட்டமாகத் தெரிகிறது
திருப்பமுடியாமல்...
மீட்டெடுக்கலாமென்றால்....
அந்த அடையாள‌ட்டை வேண்டும்போல...
என்னிடம்தான் “பற்றுசீட்டு”
அங்கு பற்றில்லை..
ஒரு எட்டு..அந்த கிராம் பேழையைக் காட்டேன்
அடுத்த வினாடியே... திருப்பிடுவேன் நகையை.

நீ
கை நாட்டு
நான்
கையெழுத்திட


பாவை படிக்க புரியும்
பாவை சுவைக்க ருசிக்கும்
பாவை பறித்தால் கசக்கும்
இதன்
உள்ளடக்கம்தான் சித்திரப்பாவை.


வாச {ல்} கருவேப்பிலையை
நீ பார்க்கவே மாட்டாயா...
கொஞ்சமாவது
கிள்ளிப் போட்டு தாளித்திப் பாரேன்....
மணக்க....


கரு கருவென. கருக்கட்டி
வளர்ந்துகொண்டே வருகிறது
நான்
திருடி உண்ட
அரும்பெரும் காட்சியகத்தால்...
காரணம் நீதான்
ரணமாகும் முன்
வா...
அருகே வா...
தொட்டுப்பார்
உன்னாலான கரு துடிக்கிறது
கரு பையில் அல்ல..
இருதயத்தில்..!

Saturday, 14 February 2015


முள் அசட்டையாய்...
இருக்கும் போதுதானே...
கொய்துவிட்டாய்....
அதிஷ்ரகாரா...